நானும் நண்பர் முகேசபாண்டியனுடன் மூன்று நாள் ஒன்றாக தங்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது.சென்னை வரும் நாட்களில் அவர் விரும்பிப் பார்க்கும் நண்பர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.வயது வித்தியாசமற்று அவருடன் உரையாடல் நடத்துவது எல்லோராலும் முடிக்கின்ற ஒரு காரியம்.அந்த அளவுக்கு இருக்கமற்ற ஒரு உறவை அவர் பேணி வருகிறார். பல வருடமாக அவருடம் பழகும் நண்பர்களின் நிறைகுறைகளை கூட நேரடியாக தயவு தாட்சண்யமின்றி சொல்லிவிட்டவும், பின்பும் எந்த விரிசலும் இல்லாமல்நட்பை கொண்டு செல்லவும் அவரால் முடிகிறது.அவரின் அளவீடுகளை எடுத்து நாம் இந்த விஷயத்திற்கு கையாள நினைத்தால் வருட இறுதியில் நம் நட்பு பட்டியலில் உள்ள பாதி பெயர்களை நாம் டெலிட் செய்தே ஆகவேண்டியிருக்கும். அந்த கூரிய முனையில் நடக்கத் தெரிந்தவர் ந.மு. அந்த இலாவகம் புரிந்தவர்.மொத்தத்தில் நாசுக்கு அறிந்தவர்.மூன்றுநாள் தங்களின் போது
அறையில் நடந்த இன்பகரமான பேச்சு இடையில் “அப்பாஸ் ஒரு மகாகவி என்று உங்களின் ப்ளாக்கில் எழுதியிருந்தீர்களா?”என்று கேட்டார்.”அப்படி எதுவும் எழுதவில்லை.இந்த மகாகவி..கொக்கரகவி என்பதில் எல்லாம் பொருள்நிறைவு கொள்ளாதவன் நான்.ஆளுமை
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.”என்றேன்.மேலும் அவரிடன் ”எதற்காக இதை கேட்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”என்றேன்.
“இல்லை.மார்த்தாண்டன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த லஷ்மி மணிவண்ணன் உங்களுக்கு அப்பாஸை யார் என்றே தெரியவில்லை.
ஆனால் அப்பாஸ் இறந்தவுடன் உங்களின் ப்ளாக்கில் அவரை பற்றி எழுதிவிட்டு ஒரு நண்பருக்கு தொலைபேசி செய்து அப்பாஸின் கவிதை புத்தகம் ஏதாவது கிடைக்குமா?என்று கேட்டிருக்கிறீகள்.இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல”என்றதொனியில் எல்லோரிடமும் அவர் பொறுமிக்கொண்டிருந்தார் அதனால் தான் இதைகேட்டேன்” என்றார்.
பொதுவாக தமிழ்ச்சூழலில் ஒரு பொதுபுத்தி நிலவுகிறது.தன்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எதையுமே படிக்காத மூடர்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் நான் படிக்கிறேன் என்று சான்றிதழ் பெறவேண்டும்.குருகுலம் பயிலவேண்டுன்.இல்லை என்றால்
நாட்டாமை தீர்ப்பு சவுக்கடியாக நம் முதுகை கிழிக்கும்.நான் குறிப்பிட்ட அந்தப்புத்தி மனநிலைக்கு சரியான சான்று:லஷ்மிமணிவண்ணன்.
அவரைபோல ஒரு நோயாலியின் நிலமை குறித்து வருத்தப்படுவதை தவிர என்னால் வேறெதுவும் செய்யமுடியாது.”அதைவிடுங்கள் பாண்டியன்..இதையெல்லாம் என்கிட்ட போய் கேட்டுகிட்டு”என்று அந்தப்பந்தை அப்படியே தள்ளிவிட்டேன். அதே கேள்வியை
மறுபடியும் ஒருமுறை கண்ணன் என்னிடம் கேட்டார். ”அப்பாஸின் கவிதைகளை பற்றி மணிவண்ணனிடம் உரையாடல் நடத்துவதே அநாகரியம் என்று கருதுபவன் நான்.அதை தவிர்த்து வேறுபேசுவோம்”என்றேன். அதற்கு கண்ணன் ”விவரம் புரியாமல் பேசுகிறான் என்று நானும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.சும்மா பேச்சுக்காக உங்களிடம் கேட்டேன்”என்றார்.
இங்கு படிப்பாளி என்றால் ஒரு வகையறா.சிந்தனைவாதி என்றால் இன்னொரு வகையறா. இப்படிதான் சூழல் இருக்கிறது.
உன்மையான அறிவுஜீவிகள் ஆள் அடையாளமற்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.இந்த ஒன்றுமில்லாத வகையறாக்களின் கொசுதொல்லையைதான் நம்மால் தாங்கவே முடியவில்லை.ஒருவனை நேரடியாக நிராகரிக்க திரனற்றவர்கள் கூட கலாச்சாரக் மட்டத்தில் வேலை செய்யும்நிலமை தமிழ்நாட்டிற்கே உரியது. ஆங்கிலத்திலிருந்து ஒரு சிலக்கதைகளை மொழிபெயர்த்துவிட்டு எழுதிய எழுத்தாளைனைவிட ஒரு பங்கு மேலே போய் ஜம்பம் அடிக்க தெரிந்தவர்களே இங்கே இலக்கியவாதிகள்.
“நானும் தாதாதான்..நானும் தாதாதான்..”என வடிவேலு ரேஞ்சுக்கு கதறும் இவர்களை வடிவேலு பாணியிலேயே சிரிப்பு போலீஸ் என்று ஒதுக்கிவிடுவதே நமக்கு உசிதம்