Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Sunday, November 13, 2011

கடந்த காலம் சொன்ன கதை





















சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. 90களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால், இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகின்றன. ஆவணத் தரவுகள் அடிப்படையில் சுயசரிதை என்பது வேறுபடும். ஆனால் தமிழ்ச் சுயசரிதைப் பிரதிகளில் ஆவண உசாத்துணை என்பது ஒப்பிற்கு மட்டும் கோடிட்டுக் காட்டப்படும் ஒரு வஸ்து. இது வேதனைக்குரிய நிலை. விரைந்து களையப்பட வேண்டிய நடத்தை.
நினைவோடை எழுத்தாக்கத்தில் கனமான அடையாளத்தை உண்டாக்கியவர் சுந்தர ராமசாமி. தான் நெருங்கிப் பழகிய பல ஆளுமைகள் பற்றி எழுத்தில் தன்னால் இயன்றவரை அவர் பதியவைத்திருக்கிறார். அவரின் துணிச்சல் நமது சூழலில் ஓர் அரிய குணம். எழுத்தாளர், தலைவர், சீர்திருத்தவாதி, ஞான ஆசிரியன் ஆகியோர் பற்றிப் பன்முகக் கோணத்தில் பல்வித நோக்கில் ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட வேண்டும். இதைக் கொண்டே புதிய தலைமுறையின் அறிவு நாணயம் பசுமையடையும்; அபிவிருத்திகொள்ளும். அந்தப் போக்கு தமிழில் அறவே இருப்பதில்லை. எழுத்தாளர்கள் பலர் தன் நேர் பேச்சுக்கும் எழுத்திற்கும் மத்தியில் பெரிய பள்ளத்தையே வெட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். பலரைக் காவுவாங்கும் விபத்துப் பகுதியாக அது செயல்படுகிறது. கல்மிஷம் எனும் சராசரி பண்பு படைப்பாளியையும் சேர்த்துக் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து வெதும்புவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. இந்தப் பின்புலத்தோடுதான் சு.ராவின் சகதர்மினி கமலா ராமசாமி அம்மாளின் புத்தகத்தை அணுக வேண்டியுள்ளது.
கமலா ராமசாமி, தனது உதிரி உதிரியான நினைவுச் சேகரங்களை ஒன்று கோத்து நளின மொழியில் எழுதியிருக்கும் நூலின் தலைப்பு: நெஞ்சில் ஒளிரும் சுடர். ஏறக்குறைய சுயசரிதை. கமலாவுக்கு எழுத்தாளராகும் விருப்பம், கனவுகள் இல்லை. தன் வீட்டில் ஒலித்த கணவர் சு.ராவின் அனுசரனையான வார்த்தைகளால் புத்தகம் எழுதும் புதிய உத்வேகத்தைப் பெறுகிறார். “உன் சிறுவயது நினைவுகளை எழுதிப்பாரேன். பத்து, பதினைந்து பக்கங்கள் எழுதிய பிறகு வாசித்துப் பார்க்கிறேன்” - அவருடைய கணவர் அளித்த உசுப்பல் வார்த்தைகள் இவை. இவற்றைக் கேட்டபின் லேசாக ஆவல் முளைக்கிறது. சு.ரா. என்ற பெரிய கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தன் வாஞ்சையான வாழ்நாளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார் கமலா ராமசாமி. அக்கண்ணாடி பிரதிபலித்துக் காட்டியது பெரும் எழுத்தாளர் சு.ராவின் தோற்றத்தையல்ல; கூடவே ஒட்டிக்கொண்டு நின்ற கமலா என்ற ஒற்றை மனுஷியின் வழியே உருவான வம்ச விருத்தியின் பிம்பத்தையும் சேர்த்துதான். அதன் பொருட்டுக் கடம்போடுவாழ்வு என்ற தன் சொந்த ஊர்ப் புராணத்திலிருந்து அசைபோட ஆரம்பிக்கிறது அவரின் உள்ளம். அப்படியே ஆலப்புழை பாலப் பருவம், வளர்ந்ததும் தாமிரபரணி நடைபழகும் திருநெல்வேலி சீமைச் சுகவாசம், இடையில் எழுந்த மதுரை குடிபெயர்வு. அங்கிருந்து நாகர்கோவில் புகுந்தவீட்டு சங்காத்தம் எனக் கடகடவென உருள ஆரம்பிக்கிறது.
கமலா ராமசாமி, அவருடைய பெற்றோரின் ஒன்பதாவது குழந்தை. உறவு அறுந்துபோகாமல் தூரத்து சொந்தத்திற்குள்ளே அவர் வாக்கப்படுகிறார். அப்பா கடம்போடுவாழ்வில் பெரிய நாட்டாமை. செல்வாக்கு நிரம்பிய வம்சம். தெருவில் “ஹரிஜன மக்கள் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்பது ஊர்க்கட்டு. அந்த உரிமை பிராமணர்களுக்கு அடுத்து பிள்ளைவாள் குடும் பத்திற்கு மட்டுமே உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்தில் கக்கூஸ் வசதிகள் எல்லாம் கிடையாது. ஆகவே தோட்டி என்ற வகுப்பினரே இருந்ததில்லை” என இவர் சுட்டும் கிராமம் தமிழகத்தின் அச்சு அசலான குக்கிராமம். இவரின் ஜோடிப்புகளற்ற இந்த மாதிரியான சிறு சிறு குறிப்புகளே நூலுக்கு வரலாற்று வலுச்சேர்க்கின்றன. இன்றும் தன் மனத்தைவிட்டு அகலாமல் அடிமனசில் அண்டிக்கிடக்கும் பால்ய நினைவுகளை, அதன் அழகழகான காட்சிகளை, மிக எளிமையாய்ப் போகிறபோக்கில் இவர் குறிப்பிடும் பாணி கவர்வதாக அமைகிறது. உமிக்கரி கொண்டு பல் தேய்த்ததில் தொடங்கி, பெண்பிள்ளைகள் தோண்டியும் கையுமாகத் தெருக்களில் திரியும் சின்னச் சின்னச் சித்திரங்கள்வரை அகண்டு போகிறது இவரது நினைவு.
பூப்பெய்தல் தொடங்கிப் பிள்ளைப் பேறு வரை. வீட்டு உரசல்கள் தொடங்கித் தன் கணவர் விருது வாங்கியது வரை, கைக்குத்தல் அரிசி சமைக்கத் தொடங்கி, கடை அரிசி பொங்கியது வரை. தோழியின் தலையில் பேன் குத்தியதிலிருந்து சினிமா பார்த்ததுவரை. இப்படி எண்ணற்ற ஊர் சோலி கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. காலம், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தன் ஈவு இரக்கமற்ற கால்களால் மிதித்து நொறுக்கி, தூக்கித் தூரக் கடாசிய அத்தனை பழங்கதைப் பண்பாட்டையும் பாவனையற்று எழுத்தில் படம் பிடித்திருக்கிறார் கமலா அம்மாள். பேறு காலத்துக் கை வைத்தியம். அதனுள் காலகாலமாக ஒளிந்துகிடக்கும் சாமான்ய மக்களின் மதிநுட்பம் என விவரிக்கும் இவர், “அம்மாவுக்கும் பெரியக்காவுக்கும் சில மாத வித்தியாசங்களில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அம்மா பிரசவத்திற்கு அக்காவும் அக்கா பிரசவத்திற்கு அம்மாவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள்” என்கிறார். இப்படித் தலைமுறை இடைவெளிக்கே உரித்தான பல விஷேசத் தகவல்கள் இவரது பதிவில் அதிகம். மருத்துவ முன்னேற்றம் இல்லாத காலத்தில் வீட்டில் உடன்பிறப்புகள் ஜனனமாவதும் வந்த வேகத்தில் நோவுகொண்டுபோவதும் வாடிக்கையாக இருந்துள்ளன.
இவரது தம்பி ஹரியின் மரணச் சம்பவம் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. தங்கை பத்மா, சீமந்தத்திற்காகப் பிறந்த வீட்டுக்கு வருகிறார். சீமந்தம் முடிந்த மறுதினம் அவருக்கு வலிப்பு கொண்டு விடுகிறது. சிறுநீரகப் பரிசோதனையில் ‘அல்பமின்’ அதிகமாகிவிட்டதாகவும் தாய் - சேய் இரு உயிரில் ஒன்றைத் தான் கரையேற்ற முடியுமென்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தாயை மட்டும் காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை உணர்ந்தவர்கள் உயிரற்றுப் பிறக்கவிருக்கும் பச்சிளங்குழந்தையின் இறுதிக் காரியத்திற்கு மண்வெட்டியும் கையுமாக முன்கூட்டியே தயாராகிவிடுகிறார்கள். முடிவில் சுபமாக மண்வெட்டிக்கு வேலையில்லாமல் போனது என்று கமலா ராமசாமி சொல்லும் பாங்கு முதிர்ந்த எழுத்துக்கான அடையாளம்.
1954இல் சு.ராவோடு கமலா அம்மாளின் கல்யாணம். திருமணத்தின் போது ஊரில் மின்சார வசதி கிடையாது. ஆனால் ஜெனரேட்டர் போட்டுத் திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஊர் மக்கள் முகத்தில் ஈ ஆடாத நாள். இந்தத் தம்பதியின் புண்ணியத்தில் ஊர்க்காரர்கள் மின்விளக்கை முதன் முதலாகக் கண்கொட்டப் பார்த்து அலுக்கிறார்கள். இவ்வளவு தடபுடலாகக் கரம்பிடித்த தன் மனைவிக்கு சு.ரா. முதன்முதலாக வாங்கிக்கொடுத்த பரிசு என்ன தெரியுமா? ஒரு ஜதை செருப்பு. அது தேய்ந்துபோய் இன்று மாமாங்கம் கடந்துவிட்டது. மனம் தேயாது இன்றைக்கும் சொல்லி மகிழ்கிறார். திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டுக்கு வந்திட்ட பின்பும் டதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கப்போகிறார் கமலா ராமசாமி. இவர் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்த கதை சுவாரஸ்யம் நிரம்பியது. அதே பள்ளியில் சு.ராவின் தங்கை சாரதா எட்டாம் வகுப்பு மாணவி. அண்ணியும் நாத்தனாரும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க இந்த நாளில் யாருக்கு வாய்க்கும்? இந்தப் பொருந்தா சகவாசக் கதைகளைக் கொண்டு ஒரு மிகப் பெரிய காலமாற்றத்தை நம்மால் மதிப்பிட்டு உணர முடிகிறது. தன் மனைவி பற்றி சு.ரா. ஒரு கடிதமொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “செங்கமலம் என்ற கமலா, மாராசி புண்ணியத்தால் தான் மனிதன்போல் நடமாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் எங்களுக்கு எவ்வளவோ மேடு பள்ளங்கள். எந்த நெருக்கடி வந்தாலும் நான் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டுவிடுவேன். அப்போதெல்லாம் அவள்தான் என்னைத் தூக்கி நிறுத்திருக்கிறாள்” - கணவரின் இன்பமூட்டும் இதமான சொற்கள். ஒரு எழுத்தாளனின் மனைவி லௌகீக கோடு தாண்டாமல் காலம் முழுக்க அடுப்படிக் கரித்துணியை மட்டுமே கட்டி அழுத காலத்தில் சு.ராவின் தாராள குணம் மனைவிக்குச் சரி பங்கு வழங்க முற்படுகிறது. கமலாவின் எழுத்தே அதற்குச் சாட்சி. அதில் அவருக்குச் சாதக பாதகங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனால் சு.ராவின் மெனக்கெடல் கூடுதல் எடை நிரம்பியது என்பதை இந்தப் புத்தகம் நமக்குப் புரியவைக்கிறது.
பாரதிக்குத் திருமணமான நான்காம் நாள். ஊர்வலம் முடிந்து, வீட்டில் ஊஞ்சல் வைபவம். சகலரின் முன்னிலையில் உட்கார்ந்து மனைவியைப் புகழ்ந்து ஓர் ஊஞ்சல் பாட்டுப் பாடுகிறான் பாரதி. பாட்டு முடிந்த கையோடு ஊராருக்கு விளக்க உரை என நீளுகிறது முண்டாசுக்காரன் பேச்சு. இச்சம்பவத்தைத் தன் பாரதியார் சரித்திரத்தில் உச்சுமுகர்ந்து எழுதுகிறார் செல்லம்மா. இல்லறத்தைத் தாண்டி சம்சார பந்தத்தைத் தூக்கி நிறுத்தப் போராடிய தன் உத்தமக் கணவன் இறந்த பிற்பாடு செல்லம்மா எப்படிப் பேசினார் தெரியும்தானே? 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என்கணவர்’ என்ற தலைப்பில் அவரது உரை இவ்வாறு பதிவானது: “காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போட வேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாழலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்துவிடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை” என வெந்தழல் சொற்களில் வேகுகிறார் செல்லம்மா. ‘மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி’ என்று வைரக் கிரீடம் பதிக்க முற்பட்டவன் மீது விழுந்த தர்ம அடி இது. அவ்வாறே காரல் மார்க்ஸுடனான வறுமை வாழ்க்கை பற்றி ஜென்னி மார்க்ஸ் குறிப்பிட்ட வரிகள் உலக பிரசித்தம் பெற்றவை: “குழந்தைகள் பிறந்தபோது தொட்டில் வாங்க காசில்லை. அவர்கள் இறந்தபோது சவப்பெட்டி செய்யப் பணமில்லை.” இப்படி ஓர் ஆளுமையைக் குற்றம் குறையோடு கணக்கிட முடியாமல் தவித்த மனைவியர்கள் மத்தியில் சு.ராவின் மனைவி வஞ்சனை கொள்ளாமல் வாக்குமூலம் வழங்கியிருப்பது தமிழில் இதுவே முதல் ஈடு. சு.ராவோடு தன் ஐம்பதாண்டுக் கால வாழ்க்கையைக் குறிக்கும் அவரின் வாக்குமூலம் இப்படி விரிகிறது. “எனக்கும் சு.ராவிற்கும் உயர ஒற்றுமை இல்லை. சு.ரா.சொல்லும்படி ஆரோக்கியமானவர் இல்லை என்றாலும் எங்கள் இருவருடைய மனநிலையும் முதலிலிருந்தே இணைந்து போகக் கூடியதாகத்தான் இருந்தது.
நிறைய விஷயங்களில் ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருவரும் இருந்திருக்கிறோம். நாள் செல்லச்செல்ல எங்களுடைய அந்நியோன்யம் கூடிக்கொண்டே போயிற்று. அதன்பின் என் உயரக் குறைவோ அவரின் ஆரோக்கியக் குறைவோ எங்கள் மனத்தில் இம்மியளவுக்கூட இல்லாமல் காற்றில் கரைந்தேபோயிற்று” என்கிறார். இந்தப் புரிதல்தான் கமலா ராமசாமியின் மூல ஆதாரம். சு.ராவைப் பற்றித் தமிழ் வாசகர்களிடம் ஏனைய சித்திரங்கள் புகை போலச் சுற்றுகின்றன. அவரைப் பற்றிய மதிப்பீடுகளில் சில கற்பிதங்கள், வழுவல்கள் உள்ளன. அவர் ஒரு பணக்கார எழுத்தாளர். அவரது குடும்பச் சூழல் அவரை சௌகர்யமாக வைத்திருந்தது. சொந்த ஊரில் அவரின் அப்பா பெரிய ஜவுளிக் கடை அதிபர். பணமுடை இல்லாத குடும்பம். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். அத்தனை புனைவுகளையும் கலைத்துப்போடுகிறார் கமலா அம்மாள்.
அப்பாவின் கணக்குப்படி சு.ரா. ஒரு பரோபகாரி. சொத்து சுகம் சேர்க்க விரும்பாத சரா சரி. வாயில்லாப் பூச்சி. ஜவுளிக்கடை வியாபாரத் தந்திரங்களை அறியாத அம்மாஞ்சி. தேக பலமில்லாத சவலை. ஏறக்குறைய இந்த வார்த்தைகள் தோற்றுவிக்கும் ரூபத்தில்தான் அப்பாவுடைய கண்களுக்குக் காட்சி தந்திருக்கிறார் சு.ரா. அதை நாசூக்காக எடுத்தியம்புகிறது கமலாவின் எழுத்து. உளப்பூர்வமாக சுந்தர ராமசாமிக்கு வியாபாரத்தைக் கவனிப்பதில் இஷ்டமிருக்கவில்லை. தறியில் பிசிறும் நூலாய்ப் பிரிந்திருக்கிறார். விடாமல் உள்ளே கோத்து கோத்து அடித்திருக்கிறது அப்பாத் தறி. இவற்றுக்கிடையில் ஊடாட்டம் கிடந்து தலையை உருட்டுகிறது. அவருக்குள் எழுத்தாளன் என்ற உணர்வே உயர்ந்து நிற்கிறது. ‘வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் செய்யப் பிறந்தவன் அல்ல’ என்று அலுப்பாகப் பேசியிருக்கிறார். மறுத்திருக்கிறார்.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற தேய்வழக்கு சு.ராவுக்கும் பொருந்தும் தானே? பலரையும் போல அவருக்கும் சில அசட்டுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன. மனைவியருக்குத் தயாராகும் பிரசவ லேகியத்தை விரும்பிச் சுவைப்பது. குளியலறைக்குள் தாழிட்டுக்கொண்டு சினிமா பாட்டை முணுமுணுப்பது எனச் சகல சந்தோஷங்களையும் சுவைக்க விரும்பிய அசல் கலைஞனின் அசரிரீகள் பல. “பொதுவாக சு.ரா. பதினொன்று மணிக்கு மேலே எழுத ஆரம்பிப்பார். ஒன்றரை வாக்கில் முடித்துக்கொண்டு எழுவார். காலையில் எட்டரை ஒன்பதாகும் படுக்கையை மடிக்க. வீட்டில் அப்பாவுக்கு பயந்து ஒரு தப்பான காரியத்தை செய்யும் குற்றவுணர்வோடு தான் அவர் தன் கதைகளை வீட்டில் மறைத்து வைத்து எழுதிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்ததும் வீட்டுப்பெண்களிடம் - அப்பா இல்லாத சமயம் பார்த்து தன் கதைகளை வாசித்துக்காட்டுவது அவரது இயல்பு” - இவ்வாறு இவர் கொடுக்கும் குறிப்புகள் முழுக்க இதுவரை நாம் அறியாத சுந்தர ராமசாமியின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. சு.ராவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றிய பதிவுகள் இதில் உள்ளன என்பது வாஸ்தவம்.
ஆனால் அதே சமயம் சில விடுபடல்களும் பதிவில் உள்ளன. கிருஷ்ணன் நம்பி, ராஜமார்த்தாண்டன், எம். எஸ்., அ. கா. பெருமாள், ஜெயமோகன், கனிமொழி, அம்பை, சல்மா இப்படிப் பலர். ஆனால் அவை நம் ஆவல் மிகுதியின்பால் எழும் தத்தளிப்புகள். எழுதியிருக்கலாமே எனத் தொனிக்கும் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கலாம். அனைத்தையும் சேர்த்து அடுத்த பதிப்பில் இவர் எழுதி விரிவுபடுத்தலாம். செல்லம்மா பாரதிக்குப் பிற்பாடு நமக்குக் கிடைத்திருக்கும் எழுத்தாளர் ஒருவருடைய மனைவியின் வரலாற்றுப் பிரதி என்பதாலேயே இந்நூலை நான் கவனப்படுத்த விரும்பினேன். இனி, வரும் காலத்தில் பெண்ணிய வாசிப்பில் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். சு. ராவின் வீட்டிற்கு ம. பொ. சியின் வருகை, கி. ராஜாநாராயணன், கு. அழகிரிசாமியின் குடும்பத்தோடான விஜயம். நா. பாவின் வாத்சல்ய தங்கல், லா. ச. ராமாமிருத்தின் அடுக்களை ஒத்தாசை, ஜானகிராமனின் வாஞ்சை நிரம்பிய வாசம், வண்ணநிலவன் அடிக்கொருதரம் எட்டுவைத்துப் பார்க்க வந்த பந்தம் என்று பலரின் வருகையைச் சிலாகிக்கும் கமலா ராமசாமி பிரமிளின் கோணல் புத்தியைக் குறிபார்த்துக் கொட்டிவிட்டு நகர்கிறார். தன் கணவரின் அதே எண்ணத்தை மறுபடியும் ஆழப் பதியவைக்கிறார். ஆனால் ஜி.நாகராஜன் உரசலைப் போகிற வேகத்தில் ஒரு வரியில் சொல்லிக் கடக்கிறார். அதில் தவறொன்றும் இல்லை என்றாலும் இவரது நூலில் குறைகொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மனிதர் பிரமிள் மட்டுமே. இதைத் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் யாருக்கும் பொல்லாப்பாகாமல் கமலா ராமசாமி அம்மாள் வஞ்சனையற்ற வாக்குமூலத்தை வழங்கி விட்டுத் தப்பியிருக்கலாம்.


( நெஞ்சில் ஒளிரும் சுடர், ஆசிரியர்: கமலா ராமசாமி பக். 160. நன்கொடை:100 (2011)வெளியீடு , காலச்சுவடு அறக்கட்டளை, 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001 )
நன்றி:காலச்சுவடு நவம்பர் 2011

Tuesday, August 31, 2010

அழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்









எவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள்? விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா? அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா? ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

மேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன? தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு? அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி.

அந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதா?அதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.

சரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.

“நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.”என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது.

இன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகிறது.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா? இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.

“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”
-இதன் பொருள் என்ன? வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.

“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு” என்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்ன?வேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:

“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள்” இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உழவு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையாளாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க? என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:

இந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.

மழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது? 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.

காவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.

இன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவுப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக முளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார்.

ஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள்? அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோ” என நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)

தகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது

Sunday, June 13, 2010

பெருதலுக்கு அப்பாலான இழப்பு










நமது வளர்ந்த நகரங்கள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக வேண்டும் என்ற விஷயத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதை போல தினமும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. தமிழ்க அரசின் கொள்கை சார் நடவடிக்கைகளும் அவ்வறே நடப்பதாக திட்ட வடிவிலான அறிவிப்புகள் நமக்கு தகவல் சொல்கின்றன. சமீபத்தில் கூவத்தை சுத்தப்படுத்தி அதை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது சம்பந்தமாக தமிழக அரசின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட கையோடு அத்திட்டம் சம்பந்தமாக தன் குழுவினரோடு சிங்கப்பூர் சென்று ஆய்வையும் மேற்கொண்டு திரும்பி இருக்கிறார். இத்திட்டத்திற்காக அரசு அறிக்கையளவில் ஒதுக்கியிருக்கும் தொகை மொத்தம் 120கோடி. தலா
சென்னை மாநகராட்சிக்கு 840கோடியும்,பொதுப்பணித் துறைக்கு 640கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்து இருக்கிறார்.அவரின் தகவலின் படி இத்திட்டம் தற்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் கனவுத் திட்டமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

கூவம் புணரமைப்புத் திட்டம் சம்பந்தமாக சில ஆலோசனைகளை பெற அமெரிக்க டெக்சாஸ் நகரில் ஓடும் நதியை பார்வையிட்டு அதன் படிப்பினைகளின் பேரில் தமிழக கூவத்தை சிறப்புற வைப்பதாக முதலில் சில கருத்துக்கள் நிலவ ஆரம்பித்தன. ஆனால் டெக்சாஸ் நதியின் அனுகுமுறைகள் கூவத்தோடு பொறுந்திப் போகாமல் இருப்பதால் இவ்விஷயத்தில் அமெரிக்காவின் உதவி நமக்குதவாது என்று தமிழக அரசு முடிவெடுத்துவிட்டதாக செய்திகள் வழியில் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. இதற்கிடையில் சிங்கப்பூரில் ஓடும் நதியை தூய்மைப்படுத்த அவ்வரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதால் துணை முதல்வர் குழு சிங்கப்பூர் விரைந்தது.1977ம் ஆண்டில் சிங்கப்பூர் நதியின் நிலைமை தற்போதைய கூவம் ஆற்றின் நிலமையைவிட மோசமாக இருந்ததாகவும் அதையே அவர்கள் சீர்படுத்திவிட்டதாகவும் நம் தமிழக அரசிற்குத் தகல்கள் கிடைத்திருக்கிறது. மிக மோசமான தன் நிலையை 1987ம் ஆண்டு சிங்கப்பூர் நதி முற்றிலுமாக உதரிவிட்டு புதுப்பொளிவை எட்டியிருகிறது. அதை சீர்படுத்த சிங்கப்பூர் அரசிற்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆக, இவ்வழியே உகந்ததென்று நம் அரசு தீர்மானித்து, பி.யு.பி. என்ற சிங்கப்பூர் அமைப்புடன் ஒப்பந்தங்கள் முடிவை எட்டவுள்ளன.

12கீ.மீட்டர் நீளமே கொண்ட சிங்கப்பூர் நதியை பத்தாண்டுகளில் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள் அவர்கள்.ஆனால் நம் கூவம் திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து தொடங்கி சென்னை வந்து சேர்வது வரை மொத்தம் 72கீ.மீட்டர் நீளமுடையது.சிங்கப்பூர் நதியை விட நீளத்தில் பெரியது. சென்னை நகரில் மட்டுமே 18கீ.மீட்டர் நீளத்தை கூவம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.
ஆக,நம்முடைய கூவம் சுத்திகரிப்பின் காலம் இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கலாம். ஐந்து வருட ஆட்சியின் காலத்திற்குள் இதை செவ்வன- தலைமைச் செயலக பாணியில் முடிப்பதென்பது ஆகாத காரியம். அப்படி விரைந்து முடிப்பதற்கு இது அரசின் பார்வையில் அதி முக்கியத்துவம் பெற்ற திட்டமுமல்ல. நாட்பட இத்திட்டத்தை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கும் இதில் ஒன்றுமில்லை. வீராணம் திட்டத்தை தொடங்கியக் கையோடு திரும்பப் பெற்றுக்கொண்ட அரசுதான் இந்த தி.மு.க.அரசு. ஆட்சியாளர்கள் எதை சொல்கிறார்களோ அதையே உண்மையாக பாவிக்கும் போக்கு மக்களிடம் இருக்கும் வரை சகலமும் அரசின் ராஜ்ஜியம் சார்ந்ததுதான். இதில் மக்களின் பங்கு எதிவுமில்லை.
இன்றைக்கு சென்னை மாநகராட்சியின் முலமாக பல கோடிதொகைகள் பூங்காக்கள் அமைப்பதற்கு செலவிடப்படுகிறது.சாலைகள் இருமருங்கிலும் உள்ள சுவர்களில் ஓவியம் வரைந்து செயற்கையான பசுமையை நிரப்பும் திட்டமும் படு ஜரூராக நிரவேற்றப்பட்டு வருகிறது. மெரீன கடற்கரையை மட்டும் பல கோடிகள் வரை செலவு செய்து சர்வதேச தர அந்தஸ்துக்கு உயர்த்தும் முயற்சிகள் நடந்தேறியும் உள்ளன.

இந்த வார இறுதியில் 1கோடியே 30லட்சம் செலவில் பனகல் பூங்கா மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.டி.நகர் பூங்கா,நடேசன் பூங்கா,அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளிட்ட 200பூங்காக்களையும் 300 சாலையோர பூங்காக்களையும் மூன்றரை கோடி செலவில் புதுப்பிக்க இருப்பதாக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு முயற்சிகளும் நாட்டின் பசுமையை காப்பாற்ற அரசு செய்யும் முயற்சிகள் என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது .ஆக, நமது அரசு நாட்டை பசுமை பொங்க வைத்திருப்பதையே விரும்புகிறது. இப்படி ஒரு பிம்பத்தையே விளம்பரங்கள் வாயிலாக பொதுமக்கள் மத்தியில் கட்டி எழுப்பியும் வருகிறது.சுற்றுச்சூழல் விஷயத்தில் அத்தனை பெரிய கரிசனத்தை அரசு காட்டுவதாக சொல்லப்படும் தகவல்களில் துளி உண்மையும் இருப்பதில்லை என்பதே இதில் நம் தரப்பு வாதமாக சொல்ல வருகிறோம்.

இந்த வார(19.02.10) இறுதியில் தினமலர் செய்தி தாளில் வெளியான ஒரு செய்தி இவ்வாறு சொல்கிறது: தாம்பரம் ‘மெப்ஸ்’’ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருநீர்மலை ஏரியையே நஞ்சாக்கி வருகிறது.இதனால் 1000 ஏக்கர் விளைநிலங்கள் அழிவின் விளிம்பில் தத்தளிக்க ஆரம்பித்திருக்கின்றன.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த ஏரி அப்பகுதி வாசிகளின் கழிப்பறையாக மாறிய அவலமும் நடந்தேற தொடங்கியிருக்கிறது என கவலை கொள்கிறது அச்செய்தி.

கூவத்தின் முக்கியதுவத்தைப் பேண முற்படும் அரசு திருநீர்மலை ஏரிக்கு கவலை கொள்வதாக தெரியவில்லை.சென்னை பூங்காக்களை காக்க முற்படும் நம் அரசு நொய்யல் ஆற்றின் பேரழிவு குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்போது அரசின் கவனத்திற்குள் ஏதோ உள்ளர்த்தம் இழைவதை நம்மால் ஊகிக்க முடிகிறது. எந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் நிற்பந்தத்தால் கூவம் கவனம் பெற்றதோ அதே பன்னாட்டு நிறுவனங்களின் நிற்பந்தத்தால் தாமிரபரணி மாசாக்கப்பட்டிருக்கிறது.
அழிந்து வரும் நமது பண்பாட்டு அடையாளங்களை பற்றி கண்ணீர் வடிக்கும் ஒருசில அரசியல் கட்சிகள் இதை ஏனோ கண்டுக் கொள்வதேயில்லை. தினமும் ஒரு போராட்டம் மேற்கொள்ளும் பிரதான எதிரிக்கட்சியான அ.தி.மு.கவோ அதன் தலைவி ஜெயலலிதாவோ இவ்வியஷத்தை காண்பதாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் அரசியல் இயக்கம் சார்ந்து முரண்பட்டாலும் முதலாளிகள் சார்ந்த நலனில் ஒன்றுபட்டே இயங்குகிறார்கள்.

அரசியல் ஊழல் குறித்து அல்லோலப்படும் பத்திரிகைகள் கூட மணல் திருட்டு,நதிநீர் திருட்டு குறித்து சமூகம் சார்ந்து ஒரு அதிகத் தகவலை வெளியிடுவதில்லை.அப்படியே வெளியாகும் சிறுசிறு செய்திகள் கூட மக்களின் கவனத்தை ஒருங்கே குவிக்க விட்டாமல் சிதரடித்து வெளியிடுகின்றன.அதையும் தாண்டி வெளிவரும் செய்திகள் தனிநபர் முயற்சியின்பால் இதழிகளில்/பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. மக்களின் கவனம் இப்பிரச்னைகளில் குவிக்கப்படாத்தற்கு அவர்களின் அறியாமையே காரணமாககிறது. இதன் முழு விபரங்களை அறியாத மக்கள், இப்பிரச்னையை இரண்டாம்(அ)மூன்றாம் நிலையில் வைத்து அனுக ஆரம்பிக்கிறார்கள்.ஆகவே இதன் அபாயம் அவர்களால் அறியப்படாத அளவுக்கு மறைக்கப்பட்டுவிடுகிறது.

ஒருவர் தனது பொருளை காணவில்லை என்று தரும் புகாரை ஏற்றுக்கொள்ளும் நம் காவல்துறை சட்டம் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வாதாரமாக இயங்கும் நதியை காணடித்துக் கொண்டிருக்கும் கிரிமினல் குற்றத்தை எப்படி அனுகுவதென்று புரியாமல் கண் விழித்து நிற்கிறது. இதைவிட பேரவலம் எங்காவது உண்டா. இங்கு சட்டத்தின் ஊமை தனத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேம். இதை மாற்றும் பொருப்புள்ள அரசியல்வாதிகள் ஆதாய பங்கீட்டின் அடிப்படையில் பிழைப்பை நடத்தப் போய்விட்டார்கள்.
நாட்டின் மையப் பிரச்னையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஏதேதோ பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து இங்கேதான் தனித்து நிற்கிறார் சி.மகேந்திரன். அவரின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’’’ என்ற இந்நூல் எதை பற்றி இன்றைய அரசியலாளர்கள் கவனம் கொள்ள மறந்துப் போனார்கள் என்பதை குறித்து வகுப்பெடுக்கிறது. வெறும் வாய்ப் பேச்சுகளால் பந்தல் அமைக்கு அரசியல்வாதிகளின் மீது தன் சவுக்கை சுழற்றுகிறது. இப்புத்தகத்தில் மொத்தம் 58 தலைப்புகளின் கீழ் வைத்து விவாதிக்கப்படும் அத்தனை சங்கதிகளும் அவ்வளவாக வெளிச்சம் காணாதவை.அல்லது அரசியல் அழுத்தங்களால் வெளிச்சமிட்டு காட்டாமல் திட்டமிட்டே மறைக்கப்பட்டவை.

ஆற்றுவழி பாதைகள் எல்லாம் வெரும் வெயில் தவழும் வெப்ப ஆறாக காய்ந்துக்கிடக்கும் பின்னணி பற்றி பேசத் தொடங்கும் மகேந்திரன் ஆற்றையும் அது சார்ந்து தமிழனிடம் மிளிர்ந்த பண்டையத் தொழில்நுட்பத்தையும் உயர்ந்த நாகரிகமுள்ள அகில உலக உயர் குடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து கதறுகிறார். அவரின் கேவல் புலம்பலாக மட்டுமே அல்லாமல் அறிவார்ந்தத் தளத்தில் ஆய்ந்தலசி ஆராய்ந்து பேசுகிறது. அறிவு பெறுக்கோடு சமநிலையும் கொள்கிறது. நீரின் மரணத்தை பற்றி விவாதிக்க ஆரம்பிக்கும் இவரின் முதல் கட்டுரை நிகழ இருக்கும் எதிர்கால ஆபத்திற்கு அடிக்கப்பட்ட முதல் அபாய மணியாக இறங்குகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் பிரான நசிவை பற்றி எல்லா கட்டிரைகளும் சதா அலறிக் கொண்டே உள்ளன. மலையின் அழிவு என்பது நதியின் அழிவு மட்டுமே அல்ல; அது மழையின் அழிவையும் உள்ளடக்கிதான் உள்ளது. நிதியின் ஆதார நீராக மழை நீரையே பெறும்பாலும் நம்பியுள்ள மாநிலம் தமிழகம். காடுகளிலிருந்தும்,மலைகளிலிருந்தும் நாம் பெறும் ஒவ்வொரு சொட்டு நீரும் மழையின் கொடையே அன்றி, நிலத்தடிநீர் மட்டுமே சார்ந்ததல்ல.

உலகம் முழுவதும் இயற்கையில் நான்கு பருவங்களே உண்டு.வசந்த காலம்,கோடை காலம்,இலையுதிர் காலம்,குளிர் காலம் என்பதே அவை. இந்தியாவில் மட்டுமே மழைக்காலம் என்று கூடுதலான ஒரு பருவக்காலம் இருக்கிறது.இதனாலேயே
ஏப்ரல் – மே மாதங்களில் பகற்பொழுது நமக்கு அதிகமாகிறது. இந்த வெயில் துணைக் கண்டமான இந்தியாவில் வடமேற்கு பகுதி,சவூதி அரேபியா,ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதி உள்ளிட்ட நிலப்பரப்பை சூடாக்குகிறது. ஆக, மழை என்பது நம் நிலப்பரப்பில் முக்கியப் பாங்காற்றுகிறது.
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையினர் தொகுத்தளிக்கும் மழை பற்றிய புள்ளி விவரங்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பெய்யும் மழையின் மொத்த அளவையை கணித்துவிடலாம். இந்த மழைநீரின் ஒரு பகுதி நிலப்பரப்பிலிருந்து ஆவியாவதன் மூலமும்,தாவரங்களின் இலைவழியே தன் ஈரத்தை வெளியேற்றுவதன் மூலமும் கழிந்துவிடுகிறது என்கிறது ஒரு தகவலறிக்கை. எஞ்சிய நீர் மட்டுமே நம் நிலப்பரப்பை ஈரப்படுத்தும் ஆற்றுநீராக செயல்படுகிறது.மண்ணிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் ஆவியாகும் மழைநீரின் அளவை, கிடைக்கும் மொத்த மழைநீரின் அளவை வைத்துக் கழித்தால் கிடைக்கும் மழைநீரின் அளவே ஆற்றுநீரின் அளவாக இருக்கிறது. இப்படி ஒரு கணக்கீட்டு முறையை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் எ.என். கோஸ்லா என்பவர்தான். இவரின் கணக்கின் படி இந்திய நிலப்பரப்பில் மொத்தம் 330 மில்லியன் ஹெக்டேரில் ஆண்டொன்றுக்கு சராரியாக ஒரு மீட்டருக்கும் கூடுதலான மழைப் பொய்கிறது. அதாவது 400 மில்லியன் ஹெக்டேர் அளவு ஆண்டுதோறும் மழையின் மூலம் நமக்கு நீர் கிடைக்கிறது.

ஆவியாக மாறும் நீரின் அளவும் ஈரப்பசையாக வெளிறும் நீரின் அளவும் தரையை சார்ந்திருக்கும் காற்றின் வெப்பநிலையைப் பொறுத்தே இருக்கும் என கோஸ்லா குறிப்பிடுகிறார்.அதாவது ஆவியாகும் நீரின் அளவு நிலத்தில் நிலவும் அந்தந்த மாதத்தின் சராசரி வெப்பநிலைக்கும் சம்பந்தமிருப்பதாக இவரது ஆய்வு சொல்கிறது.
இவ்வாறு நாடு முழுவதிலும் வீணாகும் நீரைத் தனித்தனியே கணக்கீட்டு பின் மொத்தமாக கூட்டி 230 மி.ஹெ.மீட்டர் நீர் காற்றில் கலந்து வீணாவதாக குறிப்பிடுகிறார். மழை நீராக நமக்கு கிடைக்கும் 400 மி.ஹெ.மீ. அளவில் பாதிக்கும் அதிகமான 230 மி.ஹெ.மீ.நீர் ஆண்டுதோறும் இயற்கையாகவே காற்றில் கலந்து வீணாகிறது.மீதமுள்ள 170 மி.ஹெ.மீ.நீர்தான் கடலை நோக்கி ஓடி ஆறுகளில் சேர்கிறது. அப்போது நாம் கடலில் கலக்கும் மழைநீரை மட்டுமே பாதுகாப்பது குறித்து இதுவரை கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.மழைநீர் வேரொரு இயற்கை சுழற்சியில் வீணாவதை நாம் கவனித்ததே கிடையாது எனக்கூட சொல்லலாம். மிஞ்சிப்போனால் 70-80 மி.ஹெ.மீ.அளவு நீரைத்தான் கூடுதலால நம்மால் பயன்படுத்த முடியும். அதிநவீன வசதிகளைக் கொண்டு நம்மால் மிதமான நீர் முழுவதையும் வசப்படுத்த முடியும் என்றாலும் அவ்வாறு செய்வது நல்லதல்ல.
மழைநீர் கடலைச் சேராமல் முழுவதுமாகத் தடுத்துவிட்டால் மண்ணிலுள்ள உப்புச் சாரத்தை நீக்குவதற்கு அமைந்த இயற்கை சுழற்சி தடுக்கப்பட்டாகிவிடும். அதனால் நிலத்தின் உவர்த்தன்மை மேலும் அதிகரிக்க கூடும். எனவே இம்முயற்சிகள் கவனமாக கையாள தக்கவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மழைநீரை அதிகமாக அளவில் பயன்படுத்த முடியாமற் போவதற்கு காரணம், நம் மலை செங்குத்தாக இருப்பதே. அதனால் மழைநீர் சிற்றாறுகள் மூலம் வழிந்தோடி அரபிக்கடலை கலக்க நேர்கிறது. இங்கு கடலுக்கும் மலைக்கும் இடைப்பட்ட பகுதி அகலம் குறைவானதாக உள்ளது.அதனாலேயே பாசன வசதிகளுக்காக வாய்க்கால்களை அமைப்பது சற்று கடினமான செயல்முறையாக இருக்கிறது.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் வழிந்து போன பின்பும் நீரை கொடுக்கக் கூடிய ஆற்றல் இந்த மண்ணிற்கு இருப்பதால் வெப்பக் காலங்களிலும் நீர் கொடுக்கும் அமுதசுரபியாக இம்மலையின் மணற் அடுக்குகுகள் செயலாற்றுகின்றன. இந்த மண்ணின் நுண் துளைகளே நமக்கு மினிமம் நீராதாரத்திற்கு வழிவகை செய்கின்றன. இந்த மண் நுண்ணிய துளைகள் அதிகமாக இருந்துவிட்டாலே இதிலிருந்து நமக்கு போதுமான நீரை பெற்றுவிட முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் பாதிப்பரப்பில் எரிமலைப் பாறைகளும்,கருங்கல் பாறைகளும்,வண்டல் பாறைகளுமே நிறைந்திருப்பதினால் அளவுக்கு குறைவான மழைநீரை மட்டுமே பூமித் தேக்கி வைக்க முடிகிறது.ஆனாலும் இது நமக்கு போதுமான அளவே எனலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொங்கண் மற்றும் வேறுசில பகுதிகளில் நிலத்தடியில் உள்ள பாறைப் பகுதிகளை மழையின் முதல் தூறலே நிரப்பிவிடுவதினால் தொடர்மழையின் மூலம் கிடைக்கும் நீர் நிலத்திற்குள் சேகரிக்கப்படாமலே போய்விடுகிறது. நம் நாட்டில் ஏராளமாக மழை பெய்கிறது.அந்நீரை உறிஞ்சும் மண் அடுக்குகளும் இருக்கின்றன ஆனால் நீரை தேக்கி வைக்க மண்ணிற்குள் வெற்றிடங்கள்தான் இல்லை.அதனாலேயே சகல மழைநீரும் தரையின் மேற்பிலேயே வழிந்தோடி கடலில் கலந்துவிடுகிறது.

ஒருவிதத்தில் நிலத்தடி நீரை ஆழ்துளை பம்புகள் மூலமும்,பெரிய வகை கிணறுகள் மூலமும் வெளியே இறைத்து நாம் செய்யும் விவசாயம் நன்மையானதே.இதனால் ஆற்றுநீர் இருப்பு உள்ள காலங்களிலும் நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதினால் மண் அடுக்குகளில் நிறம்பி இருக்கும் நீர் காலியாக்கப்பட்டு அடுத்த மழைக்காக கத்திருக்க செய்யமுடியும். இதுவும் கூட ஓரளவிற்குதான் சாத்தியம்.முழு நிலத்தடி நீரையும் இறைக்க ஆரம்பித்திவிட்டால் பின் கடல்நீர் உள்ளே புகுந்து நிலத்தின் உப்புச் சத்து அதிகமாகி நிலம் பாழாகிவிடவும் கூடும்.
அப்படியே ஆற்றுவழி பாசனத்தை மட்டுமே நம்பி நிலத்தடி நீரை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் நிலத்தடி நீமட்டம் நிலமட்டத்திற்கு உயர்ந்து பயிர்களின் வேர் அழுக நேரலாம்.மண்ணும் பாழாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பயிர்களின் வேர்கள் காற்றை சுவாசிக்கும் அளவிலான நீர்மட்டமே விவசாயத்திற்கு பாதுகாப்பானது. இப்படியும் இல்லாமல் நீர்மட்டம் பயிரின் வேர் மட்டத்திலிருந்து தாழ்ந்திருந்தாலும் பயிரின் வளர்ச்சி பாதிக்கவே செய்யும். அப்படியே நிலத்தடி நீர் தரைமட்டத்தை அடைந்ததும் ஆவியாக ஆரம்பித்துவிடும். நிலத்தடிநீரில் எப்போதும் ஓரளவு உப்புக் கலந்தே இருப்பதால் நீர் ஆவியாக ஆக உப்பு மட்டும் நிலத்தில் தங்க ஆரம்பித்துவிடும்.ஏதேனும் ஒரு வழியில் இவ்வுப்பு கரைந்து வெளியேறாமல் வயலிலேயே தங்கிவிட்டால் நிலம் உவர் பொங்கியதாகிவிடும்.அதனால் பயிர் செழிப்புறாமல் போகலாம். ஆக,எல்லாம் சரி மட்டத்தில் இயங்குவது அவசியம்.இயற்கை அதனளவில் இவற்றை சரியாகவே கவனித்துக் கொள்கிறது.மனிதனின் குறுக்கீடு இச்சுழற்சியை சிதைக்கத் தொடங்கும் தருணத்தில்தான் எல்லாப் பிரச்னைகளும் தலைக் காட்ட முற்படுகின்றன.இத்தகவல்கள் யாவையும் வேளாண்மை சார்ந்த அறிவுமுறைக்கு மட்டுமே ஆனதல்ல.இந்த ஒட்டுமொத்த இச்சுழற்சியினை ஒட்டிதான் விவசாயம் என்ற ஒரு பாகம் இயக்கம் கொள்கிறது என்றே நாம் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

”மொத்தம் 26 சுணைகளில் தேங்கி வழிந்து,பின் சிறுசிறு துளிகளாக ஒன்றுசேர்ந்து துணை நதிகளாக மாற்றமடைந்து பிறகு இவைதான் தமிரபரணியாகப் பிறப்பெடுக்கிறது” என்கிறார் மகேந்திரன். இக்கணக்கின் படி தாமிரபரணியின் துணையாறுகள் மொத்தம்137.ஒரு காலத்தில் தாமிரபரணி இலங்கை வரை சென்று அந்த நாட்டின் ஜீவநதியாக ஓடியதாகவும் ஒரு தகவலை எழுதுகிறார். மகாவம்சம் இலங்கை பெளத்த வரலாற்றின் மூலநூல். இது இலங்கைத் தீவை தாமிரபரணி என்றுதான் அழைக்கிறது.அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் இதற்கான சான்றுகள் உள்ளன.தமிழகத்தின் தாமிரபரணிக் கரையில் திருநெல்வேலி இருப்பதைப்போல் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி அமைந்துள்ளது. இன்றும் யாழ் பல்கலைக்கழகம் அங்குதான் செயல்பட்டு வருகிறது என்றெல்லாம் மகேந்திரன் எழுதுவது ஆய்விற்கு உகந்த விஷங்களே ஒழிய முடிவான வரலாற்றுக் குறிப்புகள் அல்ல.
இதற்கு சான்றாக பல்வேறு தகவல்கலை வழங்கும் இவர் திருநெல்வேலியை முற்காலத்தில் வேணுவனம் என்ற பெயரில் குறிக்கப்பட்டதாக சொல்லிச் செல்ல்கிறார்.இன்றைய தமிழகத்தின் நாகரீக நகரங்களின் ஒன்றான நெல்லை ஆதிக்காலத்தில் மூங்கில் வனமாக இருந்தப் பகுதி எனக் குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் காலம் மனிதன், மூங்கி அரிசி உண்டதிற்கும் நெல் அரிசி உண்டதிற்கும் இடைப்பட்ட ஆண்டுகள் எவ்வளவோ அவ்வளவு காலங்கள் என்பதாக எடுத்தியம்பப் படுகிறது. மனிதனின் விவசாய வாழ்க்கைக்கு வந்து பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் விளிக்கிறார்கள். தஞ்சயையோடு இணையக்க இங்கு நெல் விளைந்ததாக ஆங்கில ஆட்சியின் ஆவணங்களை எடுத்துக் காட்டி நெல்லை வரலாற்றிற்கு உண்மை ருசியேறுகிறார்.

நீரின் ஆதி மூலத்தை கணக்கீட முற்படும் மகேந்திரன் நிலத்தோடு ஒட்டிய மனித நாகரிகத்தையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் இணைத்து நமது மண்ணின் வீரகாவியத்தோடு கூடிய தொல்குடி வரலாற்றை பேசச் செய்கிறார். அதனால்தான் திருநெல்வேலி என்றதும் சுலோச்சனம் முதிலியாரின் பாலம் அதோடு ஒட்டி பாலையங்கோட்டை வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்னும் சுதந்திர நாயகனின் வீரமூச்சுக் காவியம் எனக் சகலத்தையும் குழைத்து கொடுக்கிறார். தமிழனின் வரலாற்று வீரதீர சங்கதிகளை சி,ம.பேசும் போதெல்லாம் உயர்வு நவிற்சி உயர்ந்து கொண்டே போவது சற்று அலுப்பை தருகின்றது. எல்லாத் தொல் கதைகளும் அதித கட்டமைப்பை கொண்டே ஒலிக்கின்றன. இவ்விஷயங்கள் யாவையும் பேசப்படும் கருத்தியலுக்கு தேவையற்ற கோணத்தையே வழங்குகின்றன.
தாமிரபரணி நதிக்கரையில் இன்று 10 பெரிய ஆலைகளும் 250க்கும் மேற்பட்ட சிறியதும்,நடுத்தரமுடையதுமான தொழிற்சாலைகளும் இருக்கின்றன.இந்த ஆற்றிலிருந்தே மூன்று மாவட்டங்களில் நாளொன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்களின் தண்ணீர் தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்.ஆனால் இப்போது இந்த ஆறு மரணப்படுக்கையில் கிடந்து அல்லாடுகிறது. இதை காக்கும் வழி புரியாமல் மக்களோ பரிதவிக்கிறார்கள். அயல் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வர மறுக்கும் போது இங்கிருந்து மட்டும் மணல் கொள்ளைகள் தங்குதடையற்று நடக்கின்றன.இந்த முரண்நகையை என்ன வென்று சொல்வது?

தலித் ஒருவன் நதிநீரில் குளித்தால் தீட்டுப்பட்டுவிடும் என்றவர்கள் இன்று நதியே தீட்டாகி தீண்டப்படாமல் கிடப்பது குறித்து மெளனம் காக்கிறார்கள். மகேந்திரன் எழுதுகிறார்: நயாகரா,மற்றொன்று விக்டோரியா ஆகிய இரு அருவிகளும் உலகில் புகழ்பெற்றதாகக் கூறப்படுகிறது.நயாகரா நதி,பனிக்கட்டியாகப் போன பிரமாண்ட தொடர் ஏரிகளின் உருகிய நீரின் பிறப்பு.37மைல் நீளத்துக்கு ஓடி வந்து இரண்டாகப் பிரிந்து,ஒரு பகுதி அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இன்னும் ஒரு பகுதி கனடாவிலும் தரையிறங்குகிறது. விக்டோரியா,ஆப்பிரிக்காவின் சாம்பசி நதியில் அமைந்த அருவி.இந்த நதியின் நீளம் 2200 மைல்கள்.400அடி உயரத்திலிருந்து பேரிரைச்சலுடன்,மலையைப் பிளந்துக் கொண்டு அருவியாக் கொட்டி தரையில் வழிகிறது.இந்த அருவிச் சாரலை போலதான் நம் குற்றாலச் சாரல். ஆயியன்காவு கணவாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து ஐயாயிரம் அடிவரை நிமிர்ந்து,பொதிகை மலையை திரும்பிப் பார்க்கிறது ஒரு மலைத் தொடர்.இதன் மிகவும் உயரமான சிகரம் பஞ்சந்தாங்கி மலை.இந்த மலையிலிருந்தே குற்றால சிந்தாநதி பிறப்பெடுக்கிறது.

இங்கு 1835ல் டாக்டர் வைட் மிக விரிவான ஆய்வை நடத்தியிருக்கிறார். பேரால்,மாவால்,வெள்ளால்,கல்லால் போன்ற வகை வகையான ஆலமரங்கள் இங்கே இருந்துள்ளன.சிறிய வடிவத்திலான ஆலமரத்திற்கு குற்றால் எனப் பெயர்.இதன் பட்டையிலிருந்து காயகல்பம் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தென்பாசிக்கும் குற்றாலத்திற்கும் இடையில் காசிமேசாபுரம் என்னும் ஊர் உள்ளது.காசிமோர் என்னும் ஆங்கில வர்த்தகர் நினைவாக இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.காப்பித் தோட்டங்களை இங்கே முதன் முதலில் அமைத்தவர் இவர்தான் என்பதால் நன்றிக் கடனாக நம் முன்னோர்கள் ஆற்றியிருக்கும் காரியம் இது. அயல்நாட்டவர்கள் கூட குற்றாலத்தில் வந்து நீராட எந்தவிதத் தடையுமில்லை.
ஆனால் இம்மலைக்கு அருகேயே அனாதிக் காலம் தொட்டு குடி இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் குளிக்க தடை இருந்திருக்கிறது என்றால் கேட்கவே உடல் கூசுகிறது இல்லையா?

1892ம் ஆண்டில் மாஜிஸ்டிரேட் உத்தரவின் படி, ஆங்கிலேயர்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை அருவியில் குளிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். விபரம் அறியாமல் மைசூரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் குளித்துவிடுகிறார்கள். உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். இறுதியில் இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடையும் வரை தலித் மக்கள் குற்றாலத்தில் நீராடும் உரிமையை இழந்திருந்தார்கள்.குற்றாலத்தில் நீராடும் இன்பம் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட்து என்ற உண்மை,1934ம் ஆண்டில் காந்தியடிகளின் தமிழக வருகையின் மூலம்தான் உலகம் அறிய நேர்ந்தது.குற்றாலத்துக்கு வந்த காந்தி, அருவியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள அய்யாசாமி பங்களாவில் ஓய்வு கொள்கிறார். அப்போது தாலுக்கா போர்டு உரிப்பினர் குமாரவேலு குடும்பம் தலைமையில் ஒரு தூதுக் குழு காந்திஜியைச் சந்திக்கிறது. அவரிடம் மேற்படியான பிரச்னைகளை கூறுகிறார்கள். இதை கேள்விப்பட்டதும் காந்தி அதிர்ச்சியடைகிறார்.
அன்று மாலையே காந்தி குற்றால அருவிக்கு அழைத்து செல்லப்படுகிறார்.அருவியின் மூலிகை குணம் இதர பெருமைகள் அவரிடம் கூறப்படுகிறது. இருந்தும் இயற்கையின் உபாசகன் காந்தி, அருவியில் நீராட மறுக்கிறார்.என்றைக்கு தலித் மக்கள் நீராடும் உரிமை பிறக்கிறதோ அன்று நானும் குளிக்கிறேன் என்றார் மகாத்மா. நதிநீர் பற்றி பேசும்போது இதெல்லாம் எங்கே வருகிறது என்கிறீகளா? அங்குதானே நாம் வேறுபடுகிறோம்.மற்ற நாடுகளை போல அல்ல நம் நதிகளை பற்றிய வரலாறு. அதோடு ஒரு அடிமையின் வரலாறும் சேர்ந்தே ஒடுகிறது.ஒரு பிரிவினருக்கு காலம் காலமாய் மறுக்கப்பட்ட நீர் என்பதால்தான் இன்று நீரற்ற நதியாக நம்முன் காட்சித் தருகிறாளா காவேரி. அடிமைகளின் சாபம்தான் நதியின் அனலாய் நம்மை எரித்துக் கொண்டிருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் பிறக்கின்றன.

பாபிலோனுக்கு இணையானது கொற்கையை நாகரிகம் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். வட்டம்,அனுவட்டம்,ஒப்புமுத்து,குறுமுத்து என 13 வகையான முத்துக்கள் இலக்கணப்படி பழங்காலத்தில் பிரித்திருக்கிறான் தமிழன்.
அகச்சாலை எனும் சொல் உயர்ந்த நாகரிக் குடியான தமிழர்களின் பெருமையை இட்டு நிரப்பும் சொல்.பாண்டியர்களின் காலதில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழில் நடைபெற்ற இடத்திற்கு அகச்சாலை என்று பெயர். தாமிரபரணிக் கரையில் பல நாட்டு நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று தாமிரபரணியில் அதற்கான எவ்வித அடிச்சுவட்டையும் காணமுடியாத அளவுக்கு மணல் கொள்ளை அரங்கேறுகிறது. இங்கு அள்ளப்படும் மணல் யூனிட் ஒன்றுக்கு அரசாங்கம் நிர்ணயித்தத் தொகை315 ரூபாய். இதே மணல் வெளிச்சந்தையில் 1600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதில் கள்ளச்சந்தையின் விலையை நம்மால் யூகிக்கவே முடியாது. 2யூட்டிற்கு மேல் லாரிகளில் ஏற்றிச் செல்லக் கூடாது என விதிமுறைகள் இருந்தும் 9யூனிட்டிற்கு மேல மணல் ஏற்றப்படுகின்றது.3அடி ஆழத்திற்கு மேல் தோண்டக்கூடது என சட்டம் இருந்தும் 11அடிக்கு மேல் குழித் தோண்டப்படுகிறது.
காலப்போக்கில் பல நதிகள் புவியின் வரைபட்த்திலிருந்து காணாமல் போய் உள்ளன. ஐயாயிரம் வருடங்கள் ஓடி செழிப்பை நல்கிய ஒரு நதி இன்று பாலவனமாகிவிட்ட்து.ராஜஸ்தானின் பாலைவனப் பகுதிதான் அப்பகுதி. அன்றைக்கு அங்கே ஓடிய நதியின் பெயர் சரஸ்வதி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதே போல பஃகுறுளியாற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையில் ஏழ்தெங்க நாடு,ஏழ் மதுரை நாடு,ஏழ்முன் பாலை நாடு,ஏழ்குணகரை நாடு,ஏழ் குறும்பாணை நாடு என 49 நாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. சரஸ்வதியை போல காணாமல் போனவையின் பட்டியல்களில் சேந்துவிட்டன இவை.

இப்படி நமது பண்டைய இலக்கியங்கள் எடுத்து சொல்லும் பல நதிகளை இழந்திருக்கிறோம் நாம். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. இதில் 26 பாடல்கள் வைகையின் சிறப்பை பாடுகின்றன. வைகையை ஒட்டி இருந்த பல்வேறு இயற்கைச் செல்லவங்களை காணவே காணோம். மதுரை திருமலை நாயக்கர் மகாலின் உட்புறத்தில் அழகிய நீராழி மண்டபமும் அழகிய வனச் சோலையும் இருந்ததாக டெய்லர் எனும் ஆங்கில பாதரியார் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். கூடல் மாநகர் பற்றி கிரேக்க ஆவணங்களில் 2320 ஆண்டுகளுக்கு முன்னேயே பதிவாகியிருக்கிறது
இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் இருக்கும் இடம் ஒருகாலத்தில் நீரும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம்,பிறப்பிடம். இவ்விடத்திற்கு வலைவீசித் தெப்பம் என்பது அன்றைய பெயர். இப்படி ஏகப்பட்ட பொதுக் கூடங்களை நம் அரசு இந்நாளில் ஏரி, குளங்களில்தான் நிறுவியுள்ளது.

தமிழன்; இலஞ்சியம்,கயம்,கேணி,கோட்டகம்,ஏரி,மலங்கள்,மடு,ஓடை,
வாவி,சாலந்தரம்,வட்டம்,தடாகம்,நளினி,பொய்கை,குட்டம்,கிடங்கு,குளம் என மொத்தம் 17 பெயர்களை நீர்நிலைகளுக்கு சூட்டியிருந்தான்.இன்று இவ்வார்த்தகளைப் போலவே இவ்விடங்களும் புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டன.

ஒரு காலத்தில் நிரம்பி வழியும் மடைகளை நீர் உள் மூழ்கிப்போய் திறந்துவிடுபவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்.ஆனால் இச்சொல் இன்று வசைச் சொல்லாக மாறிப்போனது. வைகையிலிருந்து கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதிற்கென்றே சில வல்லுனர்கள் அன்றைக்கு இருந்திருக்கிறார்கள். அப்படி புகழ் பெற்றவந்தான் இருப்பைக்குடி கிழவன் என்பவன்.இவன் ஒரு குறுநில மன்னன். கி.பி.815 முதல்860 வரை ஆட்சி புரிந்தவன்.
ராமநாதபுரத்தின் சேதுபதிகள்தான்,முல்லை பெரியாறு நீரை வைகையில் இணைக்கும் சாத்தியங்களை முதலில் ஆராய்ந்தவர்கள்.முத்து இருளப்பிள்ளை சேதுநாட்டின் தலமை அமைச்சர்.இவர் தலைமையில்தான் 12பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று,மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றது. கேப்டன் ஸ்மித் என்ற பிரிட்டீஷ் சர்வேயரும் இக்குழுவில் பங்கேற்று இருக்கிறார்.ஆய்வு செய்திட்டக் குழு இத்திட்டம் சாத்தியமானதுதான் என்ற முடிவிற்கு வந்திருக்கிறது.
இதற்கான பெறும் தொகையை செலவிட இயலாது என்பதால் 1798 இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

திருவிதாங்கூர்,கொச்சின் ஆகிய இரு சமஸ்தான்ங்களும் ஆட்சியின் கீழ் இருந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திற்கும் இவர்களுக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.8 ஆயிரம் ஏக்கர் சென்னை மாகானத்தின் சார்பில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட்து999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒப்பந்தம் இது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய். இத் தொகஒ 1960ம் ஆண்டு 2லட்சது,57 ஆயிரத்து,789ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 1896ம் ஆண்டின் கண்க்குப்படி 850 கோடி கன அடி தண்ணீர் அரபிக்கடலில் சென்று கலந்த்தற்கான சான்றுகள் இருக்கின்றன.
பின் 1887ல் ஆங்கிலேய ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைய ஏழு ஆண்டுகள் பிடித்துள்ளன. இதற்கான அன்றைய செலவு:80லட்சது 30 ஆயிரம் ரூபாய்.அணைக்கட்டுதல்,சுரங்கம் அமைத்தல் ஆகியவற்றுக்கான செலவு: 42லட்சது,26 ஆயிரம் ரூபாய். கால்வாய்,வாய்க்கால் அமைக்கும் செலவு 18 லட்சது,43 ஆயிரம் ரூபாய். இயந்திரங்கள் வாங்கியதற்கான செலவு:20லட்சது,61 ஆயிரம் ரூபாய்.இதில் பென்னிக் குக்கின் மாதச் சம்பளம்: 1,752 ரூபாய்4 அணா. பணியாற்றிய மேஸ்திரி கூலி:15ரூபாய். ஆண்கூலி:4அணா.பெண் கூலி:2 அணா. 1887க்கும்1895க்கும் இடைப்பட்ட செலவு விபரங்கள் இவை.
இதையெல்லாம் கூறி விட்டு மகேந்திரன் சொல்ல வரும் அறக் கதை என்ன தெரியுமா?
ஒருகட்ட்த்திற்கு மேல் ஆங்கிலேய அரசு அணைக்கட்ட மேலும் நிதி ஒதுக்க முடியாது என்று கைவிரித்துவிட பென்னிக் குக்கின் மனம் துயர ஆரம்ம்பிக்கிறது.உடனே தன் கனவர் படும் மன உளைச்சைக் கண்டு அவரின் மனைவி உதவ முன்வருகிறார். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்து சென்று தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று கொண்டு வந்து அணையை கட்டுமாறு அறிவுரை வழங்குகிறார். ஆங்கில வெறி கதையை மட்டுமே குதப்பிக் கொண்டிருக்கும் நமக்கு அவர்களின் கொடைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் மகேந்திரனின் எழுத்து நம் சுயநல ஆசைகளுக்கு மூட்டப்பட்ட நெருப்பு என்றே நம்மைச் சொல்ல வைக்கிறது.
அதைபோவே மற்றொரு ஆங்கில துரை வெல்ஷூக்கும் மருது சகோதரகளுக்கும் இடையிலாக நடந்த கதை நெஞ்சை எரிக்கிறது.

தாமிரபரணியை பற்றி எழுதும் இவர் காவேரிக் கரையில் பிறந்தவர். ஆவூர்கிழார்,ஆவூர் மூலக்கிழார்,இடைக்காடர்,இரும்பிடர்த்தலையார்,உறையூர் இளம்பொன் வாணிகனார்,உறையூர் ஏணிச்சேரி முட மோச்சியார்,உறையூர் முதுகூத்தனார்,எருகாட்டூர் தாயங்கண்ணனார்,ஐயூர் முடவனார்,ஐயூர் மூலக்கிழார்,கருவூர் கதப்பிள்ளை,கருவூர் பெரும்சதுக்கப் பூதனார்,காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகணார் மகனார்,நம்பூதனார்,குடவாயிற் கீரத்தனார்,கோப்பெரும்ஞ்சோழன்,சோணட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்,சோழன் குளமுற்றது துஞ்சியக் கிள்ளிவளவன்,சோழன் நல்லுறுத்திரன்,பேரெயின் முறுவலார்,பொத்தியார்,வெண்ணிக்குயத்தியார்,வெள்ளைக்குடி நாகனார் ஆகியோ எல்லோரும் காவேரிக் கரை சங்கப் புதல்வர்கள்தாம்.
அவர்கள் சங்கக் கவிதைகளில் ஆற்றிய பணியை இன்று தமிழ் உரையில் பதிய வைக்கிரார் இவர்.

பவானி,கரூர் நாகரீகம்,காஞ்சி மாநதிஉறையூர் கலாச்சாரம்,மலைக்கோயில் வரலாறு,கல்லணைக் கதை,சோழர் கால நீர்ப் பாசனம்,அழ்ந்த பூம்புகார், பல்வேறு தகவல்களின் கலைஞ்சியமாக விளங்குகிறது மகேந்திரனின் இந்நூல்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சிக்கும் இவரின் இந்நூல் முடிவிற்கும் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. கூவத்தின் இன்றைய சமாச்சாரங்களோடு தொடங்கும் எனது கட்டுரையை போலவே இவரின் இறுதிக்கு சற்று முந்தைய கட்டுரையும் கூவத்தை பற்றியே பேச்ச் செய்கிறது. ஒருக்கோட்டில் செயல்படுபவர்கள் ஒரே கோணத்தில்தானே சிந்திக்க முடியும்.அதில் என்ன ஆச்சர்யங்கள் இருக்கப்போகிறது.




















‘சிற்றிலை’ ‘ ஏற்பாடு செய்திருந்த சி.மகேந்திரனின் ’’ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ ‘நூல் குறித்து கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

Wednesday, February 11, 2009

செயல்நோக்கம் இல்லாத ஒரு செயல்நோக்கத் தன்மை






பொதுவாகக் கவிதைகள் குறித்துப் பேசுவதைவிட கவிதைகள் குறித்து எழுதுவது பல சமயங்களில் அபத்தமாகவே முடிகிறது. அதனாலேயேகவிதை இயல் பற்றிய கறாரான கருத்துள்ளவர்கள் பெரும்பாலும் கவிதைகள் குறித்து எழுதுவதைத் திட்டமிட்டே தள்ளிப் போடுகிறார்கள் அல்லதுதவிர்க்கிறார்கள். நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல; இதற்கு இன்னொரு பார்வையில் பதில் தேடினால் கவிதையின் இடம் என நாம் தீர்மானிக்கும் இடம்பருவத்திற்குத் தப்ப, தொடர்ந்து நகர்ந்து கொண்டே அல்லது மாறிக்கொண்டே இருப்பதுதான் என்பது புலனாகும். ஆக, கவிதைக்கு ஒற்றை இருப்பிடம் என்பது சாத்தியமில்லை.அதற்காகக் பல இடங்களில் திக்கற்றுத் திரிவதெல்லாமும் கவிதையாகிவிடாது.கவிதைக்குத் திக்கு இருந்தாக வேண்டும்.திக்குதான் தீரம்.
ஒரு கோணத்தில் உண்மையைப் போலவும் பலவிதத்தில் பொய்யைப்போலவும் இருப்பதைக் கவிதை என்கிறோம். கவிதையில் உண்மைக்கு நிகர் பொய், சரிநிகர் சமானம். வெறும் உண்மைகளைக் கொண்டு புனையப்படுவது கவிதை அல்ல; தகவல் அறிக்கை.அதனால்தான்”ஒரு எழுத்தாளனின் எழுதுகின்ற வேலையானது வெறும் தகவல் தெரிவிக்கும்காரியம் அல்ல”என்றார் பார்த்.தகவலுக்குள் உண்மை இருக்க வாய்ப்புள்ளதே ஒழிய, தகவல் முழுக்க உண்மையைக் கொண்டதல்ல;உண்மையான,தகவலான விஷயங்கள் அதில் இருக்கலாம்நிச்சயம் கவிதை அம்சம் இராது.கவிதைக்குக் குட்டிக் குட்டிப் பொய்கள் அவசியம். கவிதைக்குள் பொய், ஆணென்றால் உண்மையோ, பெண். எனவே கவிதையில் ஈருடல் வேண்டும்.இது புற கருத்தியலுக்குப் பொருந்தாது.
நவீன கவிதையில் பெண் என்பவள் புற அளவில் அரசியல் காரணியங்களுக்காக வேறாகிறாள். ”பெண் வாசகர் என்ற கருதுகோள் ஒரு பிரதியின் பாலியல் சங்கேதங்களுடைய தனிச்சிறப்பின் மீது நம்முடைய கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரதியைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளலை அது எவ்வாறு மாற்றுகிறது” என்பதைப் பற்றிஎலைன் ஷோவால்ட்டர் (ELAINE SHOWALTAR) நிறையவே விவாதிக்கிறார்.இதைத்தான் பெண்ணிய வாசிப்பில் என்கிறார்கள்.நடப்பிலுள்ள பொய்யானது கவிதைக்குள் அழகியலாக மாற்றமடைகிறது.காண்ட் உள்ளிட்ட பிற கோட்பாட்டாளர்களின் கருத்தின்படி ”அழகியல் பொருட்களுக்கு, செயல் நோக்கம் இல்லாதஒரு செயல்நோக்கத்தன்மை இருக்கிறது.”
”இலக்கியத்தை வித்தியாசமான முறையில் வாசகர்கள் கவனித்துப் பார்ப்பதற்குக் காரணம், அதனுடைய கூற்றுகள் உலகத்தோடு ஒரு தனிச்சிறப்பானஉறவைக் கொண்டுள்ளன என்பதுதான்.இந்த உறவை நாம் புனைவு ரீதியானது என்று அழைக்கிறோம். ஆக, அகம் புறம் என்பது ஆண் - பெண் போல. தமிழ்க்கவிதை மரபு அகத்திற்கு தரும் முக்கியத்துவத்தைப் புறத்திற்கும் வழங்கியே உள்ளது.இன்று நாம் எவ்வளவுதான் மரபை மீறியதாக நம்பினாலும் அவற்றின் கண்ணிகளை உடைத்து வெறுமனேவெளியேறிவிடுவதென்பது முடியாததாகிறது.மரபை குறித்து மீள் வாசிப்புகள் நடக்கும் தற்காலத்தில் இதைப் பற்றிய புரிதலின் தேவை மேலும் கூடுதலாகிறது நமக்கு.
கவிதையை இன்றைக்குள்ள பின் நவீனத்து கருத்தியல் நிராகரிக்கிறது.’’கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது.மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டு இயங்குகிறது” என்கிறார் ரொலாண்ட் பார்த். அப்படியென்றால் நாம் கவிதையை ஓரங்கட்டிவிடலாமா?முடியாது.ஒருவேளை அக்கருத்து மேற்கில் பொருந்தலாம்.கவிதை நடையே உரைநடையாக புழங்கிய நம் குடிக்கு நிச்சயம் பொருந்தாது.இங்குதான் நாம் கிழக்கில் சாய்கிறோம்.உதவிக்கு எட்வர்த் சயீத் நிற்கிறார்.
ஒருவிதத்தில் மீண்டும் மீண்டும் புதிய கவிதைகள் பிறந்துகொண்டே இருந்தான் பழைய கவிதையின் இருப்பு சாத்தியமாகிறது.ஒரு வகையில் புதிய கவிதையை வாசிப்பதென்பது அதைப் பழைய, சமகாலக் கவிதையோடு தொடர்புபடுத்துவதாகும். அதனால் ஒரு தளத்தில் ஒரு கவிதை வாசிப்பதென்பது அது ஒட்டுமொத்த கவிதையை வாசிப்பதாகிறது.ஒரு கவிதையைவாசிப்பதன் மூலம் எப்படி ஒட்டுமொத்த கவிதையை அது வாசித்ததாகிறதோ அதைப் போலதான் பல கவிதைகளை வாசிப்பதென்பது ஒரு புதிய கவிதையைப் படைப்பதாகிறது.பழையதன்நகல்தான் புதியது.பழையதன் பரிச்சயம்தான் புதியதற்கான முன்நகர்வாகிறது.ஆகவே, ஒரு புதிய படைப்பாளிக்குக் கவிதை எழுதுவதற்கு ஆழ்மன ரீதியாகக் கவிதை இயல் பற்றிய ஞானம் எவ்வளவு முக்கிமானதோ அதைப்போலவே அதன் வரலாறும் அவசியமானது. அப்போதுதான் அவனால் புதிய யுத்திகளை நோக்கியும், கவிதையை புதிய வெளிக்குள் நின்றும் பேச முடியும்.
நவீன கவிதையைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் வாதம்,புரியாமை. இருண்மை. புரியாமையின் முதற்காரணம் கவிதையல்ல;அவதானிப்பு.அதுவும் நெடிய அவதானிப்பு.சில சமயம் நெடிய அவதானிப்புகூட புரிதலுக்கு உதவாமல் போகலாம்.அப்பட்டமான அர்த்தங்களைக் கவிதைக்குள் தேடுபவர்கள் ஏறக்குறைய கவிதையின் எதிரிகள்(அர்த்தம் என்பதை உரைவடிவில் விளக்கப்படும் நேரடித் தன்மையென கொள்ளவும்).”அர்த்தம் என்பது சார்புநிலை கொண்டது.எதையும் சார்ந்திராத சுயம்புவான அர்த்தம் என்று எதுவும் கிடையாது. அர்த்தம் என்பதுபொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மொழி என்கிற அமைப்பின் உற்பத்தியே. அர்த்தங்களை உருவாக்கும் இந்த மொழி என்கிற அமைப்பு அடிப்படையில் அர்த்தங்கள் ஏதும் இல்லாததே”என்பதே அர்த்தம் பற்றிய ரொலாண்ட் பார்த்தின் விளக்கம்.
என் புரிதலில் கவிதையின் அர்த்தம் அகராதிக்கு வெளியில் கிடக்கிறது.அகராதியில் பொருள் தேடுபவர்கள் ஒரு நாளும் கவிதையை உணரமுடியாதவர்கள்.அகராதியின் அந்தப் பக்கம்என்பது அனுபவத்தின் பக்கம். அனுபவம் என்பது வாழ்வியலின் பொருள்.பொருள் என்பது இயற்கையின் கச்சா.கச்சா என்பது கவிதையின் ஆன்மா.ஆன்மா என்பது அத்துவானத்தின் வெளி. வெளி என்பது பிரபஞ்சத்தின் நிறம். நிறம் என்பது ஊடுறுவும் ஒளி. ஒளி என்பது நிதர்சனத்தின் காட்சி.காட்சி என்பது நடப்பியலின் கலை.கலை என்பது செயல்பாட்டின் வடிவம்.வடிவம் என்பது கற்றலின் பிரதிபலிப்பு. பிரதிபலிப்பு எனபது மொழியின் வெளிப்பாடு.வெளிப்பாடு என்பது சாரம்சத்தின் உணர்தல். .உணர்தல் என்பது மனதின் அமைதி.அமைதி என்பது ஆழ்கடலின்தியானம்.தியானம் என்பது ஆன்மிகத்தின் தரிசனம். தரிசனம் என்பது கடவுளின் இன்மை. இன்மை என்பது சுவடற்ற கரைதல்.கரைதல் என்பது மென்மையின் ஒலி. ஒலி என்பது நிலத்தின்நீர் . நீர் என்பது ஆகாயத்தின் நிர்மூலம். நிர்மூலம் என்பது அனுபூதியின் காற்று. காற்று என்பது உடம்பின் உயிர்.உயிர் என்பது ஞானத்தின் சக்தி.சக்தி என்பது நெருப்பின் வலிமை.வலிமைஎன்பது ஆரோக்கியத்தின் கிரியா.கிரியா என்பது படைத்தலின் லயிப்பு. லயிப்பு என்பது உற்பத்தியின் உறவு. உறவு என்பது இனத்தின் காதல்.காதல் என்பது தத்துவத்தின் அறம்.அறம் என்பதுதேவியின் கவிதை. கவிதை என்பது இன்பத்தின் அனுபவம்.
தாய்த் தமிழ்த்கவிதைப் பற்றிய வாசிப்பு பரிச்சயம் தமிழியல் மாணவனான கிருஷ்ண மூர்த்திக்கு கல்விப்புலமாகவே வாய்த்திருக்கிறது.அது அவருக்கு பேரான விஷயம். பேரானதை அவர்எப்படி கையாளப்போகிறார் என்பதில்தான் ரகசியம் பொதிந்துள்ளது.கவிதையின் ரகசியமாக அது உருமாற்றமடைய வேண்டும்.அவரது தமிழ் அடிப்படைஇலக்கண அறிவு கவிதையின்கருத்தியல் புலமைக்கு உதவலாம். நேரடியாக அது இன்றைய கவிதைக்குள் வந்தால் ஒவ்வாமையாகிவிடும்.காலத்தின் ஒவ்வாமை.அதை மீறி கவிதையை அவர் கொண்டு செல்ல வேண்டும்.அதற்குத் தமிழ் இலக்கிய கல்வியைப் போல கல்விப்புலத்திற்கு வெளியில் ஓர் இலக்கிய கல்விப் புலம் இருப்பதை கண்டு அதில் கிருஷ்ண மூர்த்தி அடிப்படை பயில வேண்டும். இது ஏறக்குறைய ஒரு மாற்றுக் கல்வி மாதிரி. அப்படியான தெளிவு உண்டாகும் நாளில் அவரால் கவிதையின் மெய்மையை எட்டிவிட முடியும். அந்த வெளிச்சத்தைத் தொடஇருட்டில் நிற்க வேண்டும். அந்த இருட்டுலகின் வருத்தலுக்கு கிருஷ்ண மூர்த்தி தயாராகிவிட்டார் என்பதே மகிழ்ச்சி.இனி இருட்டையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றி அடுக்குவதில் அவருக்கு சாமர்த்தியம் கைவர வேண்டும், அவ்வளவுதான்.
இன்றைய பொருள் ஈட்டும் உலகில் கவிதையின்பால் மூர்த்திக்கு ஆவல் பிறந்திருப்பதே நம்மை இன்பமிக்கச் செய்கிறது.பல நாள் சந்திப்பில் கூட மூர்த்தி தான் ஒரு கவிஞன் என்பதைஎன்னிடம் காட்டிக்கொண்டதேயில்லை.திடீரென்று கொண்டுவந்து நீட்டினார்.மறுக்காமல் பெற்றேன்.காரணம்,மூர்த்தியின் எளிமை எனக்குப் பிடிக்கும்.நல்ல மாணவன் பட்டியலில் நிற்பவர் அவர்.அதற்காக எனக்கு இவரை அறிமுகப்படுத்திய அடையாளம் சாதிக்கிற்கு நன்றி.வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான இவரின் கவிதையின் நிறைகுறை குறித்து அதிகம் நான் அலசிஆராயவில்லை.ஆனால் முழுக்க வாசித்தேன். அதைப் பற்றிய எனது கருத்துகளை வாசகர்களாகிய உங்களைப் போலவே என்னோடு வைத்துக் கொள்கிறேன்,அது இங்கே இடையூறாக இருக்கும் என்பதால்.இதுவும் ஒரு நாசுக்குதான். கவிதை எழுதுவது யாருடைய நல்கையையும் பெறவேண்டியல்ல;அது ஒரு நோக்கில் சமூகப் பொறுப்புணர்வின் சுமை.சுமையைத் தலையில் தூக்கிக் கொண்டு திரிவது இன்பமுறும் காரியமா?ஆகவேதான் மற்ற எல்லோரைக்காட்டிலும் ஒரு சமுகத்திற்கு கவிஞன் என்பவன் முதன்மையானவனாகிறான்.ஒரு மொழியை அடுத்த சந்ததிக்கு சுமந்து செல்லும்,புதுப்பிக்கும் பொறுப்பு அவனிடம்தான் இருக்கிறது.மொத்தத்தில் மொழியின் கிடங்குஅவன்.இப்பெருமைக்குரிய பணியை ஏற்கும் கிருஷ்ண மூர்த்திக்கு என் வளமான வாழ்த்துகள்.
- கடற்கரய் சென்னை-15 14.12.2008

பதியப்பட வேண்டிய வரலாற்று ஆவணம்





சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் ஒரு நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்களே கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை மிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேர கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல.ஹரப்பா மாதிரி நீண்ட பாரம்பர்யம் மிக்க ஒருகுடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குதான் இப்படி சமகால பிரக்ஞையற்று கதை சொல்லிக்கொண்டு திரியப் போகிறோம் என்பது ஒருகேள்வி. ஒவ்வொரு நாளும், பொழுதும் ஓர் ஆவணமாக மாறக்கூடும்.அதை சமீப கால சான்றுகள் நிறையவே நமக்கு உணர்த்துகின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்க நாம் தவறிக்கொண்டிருக்கிறோம் என்பதைஇந்த வருட புத்தகக்(கண்)காட்சி எனக்கு உணர்த்தியது.
முப்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் இக்கண்காட்சி பற்றிய பதிவுகள் எத்தனை நம்மிடையே எழுதப்பட்டு இருக்கின்றன? இதன் வளர்ச்சிகுறித்து நம்முடைய ஆவண அவதானிப்பு என்ன?முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகங்களை ஓரிடத்தில் வெறுமனே கொட்டிக் குவித்து அதைக் காண வாருங்கள் என்று அழைத்தபோதுதமிழ்மக்களின் மனநிலை,எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்பதெல்லாம் ஊகிக்க முடியாமல் தவிக்கவே நேர்கிறது. பபாசியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பதிப்பகங்களின் வரலாற்றைக் குறிக்கும் நூல் ஒன்றை வெளியிட்டதாக அறிந்தேன்.ஆனால் அதன் பிரதி இன்று பார்க்கவும் கிடைக்கவில்லை.இதைச் செய்ய வேண்டிய பபாசி பதிப்பகங்களின் முகவரியைஅச்சிட்டு அதை நூறு ரூபாய்க்கு வாங்குங்கள் என்று சொல்லி ஒலிபெருக்கியில் கூவிக் கூவி அழைத்து கொண்டிருக்கிறது.இதுபோன்ற கூத்துகள் எல்லாம் இங்கு மட்டுமே நடக்கக்கூடியவை.சமீபத்தில் பீட்டர் மேனுவல்லின் ”காசட் கல்ச்சர்”என்ற புத்தகத்தை பார்த்தேன். அதில் அவர் இந்திய அளவில் வாய்மொழிப் பாடல்கள் ஒலிநாடா வடிவில் மாற்றப்பட்டு அதுஒலிக்கும் போது ” இந்தியன் சைக்கி ” என்பது எப்படி செயல்படுகிறது என ஆராய்ந்து எழுதியிருந்தார்.அதே போன்று பவுல் டி.கிரீனின் என்பவர் தமிழ் ஒலிநாடா கலாச்சாரத்தைப் பற்றிதனி நூல் ஒன்றை எழுதி இருக்கிறார்.அதில்” தமிழ் சைக்கி” எப்படி செயல்படுகிறது என அலசி ஆராய்ந்திருந்தார். எங்கோ ஒரு கலாச்சாரத்தில் பிறந்து கீழை நாகரிகத்தை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் இவர்களுக்கு எப்படி பிறக்கிறதென்றே புரியவில்லை. ஒருவிதத்தில் இதை புவிசார் காலனியவாதம் என்று சிலர் புறந்தள்ளினாலும் அவற்றின்துணை கொண்டுதான் ஒவ்வொரு தமிழ் ஆய்வாளனும் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டி இருக்கிறது. எரிக் மில்லர் என்ற இன்னொரு மேலைநாட்டு ஆய்வாளர்.சமகால சிற்றிலக்கியவாதிகளுக்கு நன்கு பரிச்சயப்பட்டவர். சிலப்பதிகாரத்தைப் படித்துவிட்டு கண்ணகியின் இடப்பெயர்வில் வரும்வழியை நேரடியாகவே பார்க்கப் புறப்பட்டார் அவர் என அறிந்தபோது எனக்குச் சற்று நடுக்கம் உண்டானதை நான் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது.
”பட்டாங்கு யானும், ஓர், பத்தினியேம் ஆகில், ஒட்டன், அரசோடு ஒழிப்பேன்; மதுரையும்! என்பட்டிமையும் காண்குறுவாய், நீ” என கண்ணகி உரைப்பதுநமக்கு வெறும் செய்யுள் மட்டுமே.சிலப்பதிகாரத்தை வெறும் காதை வடிவமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட நம் பொதுப்புத்திக்கு இந்தப் பயண யோசனை உரைக்காமல் போவதுஏனோ தெரியவில்லை. இப்படி வரலாற்றில் நெடுக பதியப்படாமல் விட்ட வெற்றிடத்தில் சிக்கிச் சிக்கலுற்றிக்கிறது நம்முடைய வரலாறு.பலவகைகளில் வரலாறு என்பது கேள்விகளில் தொடங்கி கேள்விகளிலேயே முடிவுறுகிறது. அது எப்போதும் முற்றுப் பெறக்கூடியதல்ல; மாறாக ஒரு தொடர்ச் செயற்பாடு.”வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம்; வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம்; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலானவிவாதம்; உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள ஒரு விவாதம்.விவாதங்கள் முக்கியமானவை; அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன”என்கிறார் வரலாற்று விமர்சகர் ஜான் எச். அர்னால்டு.நம்மிடையே சரித்திர ஆசிரியர்கள் வளர்ந்த அளவிற்குப் பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்,புவியியல் வரலாற்றாசிரியர்கள், அறிவியல் வரலாற்றாசிரியர்கள்,சமூகவியல் வரலாற்றாசிரியர்கள்,அரசியல் வரலாற்றாசிரியர்கள் என்று கிளைத்து இத்துறை வளரவில்லை . ஒரு துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்ற துறை பற்றி எதிர்ப்புணர்வையே கடைப்பிடிக்கிறார்கள். வரலாற்றில் ஆர்வத்தோடு இயங்கும் ஓர் ஆசிரியர் தத்துவத்தை ஜன்மப் பகையாகக் கருதும் போக்கு நம்மவர்களுக்கே சொந்தமானது. மேலைநாடுகளில் ஒரு துறையோடு மற்ற துறையாளர்கள்விவாதித்து, பொருள் கொண்டு அவற்றை எழுதி வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் தத்துவவியலாளர்கள் அகாடமி அளவில் பணிபுரிகிறார்கள் என்ற தகவல்நம்மைச்சலனப்படுத்துவதே இல்லை. சென்னைப் பல்கலையில் தத்துவத்துறையே மூடப்பட்டுவிட்டது என்றதகவல் எத்தனை பேரை சுடக்கூடியதாக இருந்திருக்கும்.இதையெல்லாம் முன்வைத்து புத்தகக் காட்சி பற்றியும் அங்கே வரும் நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தேன். வழக்கமான புலம்பல்தான் என ஒதுக்கியவர்கள் பலர். என்னுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு கைகோர்த்தவர்கள் சிலர். உடனே தாமதிக்காமல் ”சென்னைப் புத்தகக் கண்காட்சி; தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலை எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தப் பத்து நாட்களில் கால் கிணறு தாண்டியாயிற்று. எப்படியும் ஓரிரு மாதங்களில் நூல் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன்.முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ராஜாஜி ஹாலில் சுமார் ஐம்பது கடைகளுடன் தொடங்கப்பட்ட பபாசி கண்காட்சி இன்று அறுநூறு கடைகள் வரை வளர்ந்திருக்கிறது.அந்தக் காலத்தில் அரை அணா நுழைவுக்கட்டணம். இன்று படிப்படியாக வளர்ந்து ஐந்து ரூபாயைஎட்டியிருக்கிறது. கடைகளில் அலங்காரம், கூடாரத்தில் பிரமாண்டம் என எதிலும் வளர்ச்சி கூடியிருக்கிறது. காயிதே மில்லத் கல்லூரி புத்தகக் கண்காட்சியோடு பத்தாண்டுஅனுபவம் எனக்கு. அங்கிருந்த வசதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் புதிய வடிவமைப்பைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் கழிப்பிட வசதி, அரங்கதாரர்களுக்கு மின் விசிறிவசதி போன்ற விஷயங்களில் பபாசிக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை. கட்டுப்பாடற்ற ஒரு சூழலே தென்படுகிறது.பார்வையாளர்களுக்குப் புத்தகங்களைச் சரிவரத் தேடிப் பார்க்கும் பக்குவமான போக்கில் ஏதோ குறைபாடே தெரிகிறது.கடைகளின் வரிசைக் கிரமங்களில் ஏதோ குழப்பங்கள் இருப்பதாக பலர்என்னிடம் குறிப்பிட்டார்கள். புத்தகத்தை வாங்குவதற்குள்ளாகவே தன்னுடைய உடல்நலத்தில் ஏதேனும்குறைகள் இருக்கின்றனவா என அறியும் மருத்துவ முகாமிற்குத் தாவி விடுகிறது ஒரு கூட்டம். வாசகர்களாக வருபவர்களின் மனநிலையை பபாசி ஒரு பதற்றத்திற்கு உட்படுத்தி அவர்களைத் திருப்புவதில்ஆரோக்கியம் இருப்பதாக சொன்னால் எப்படி நம்மால் ஏற்க முடியும். தினமும் நடத்தப்படும் அரங்கக் கூட்டங்கள் மக்களுக்குப் பயன்தருவதாக இருக்கின்றனவா. வழக்கமான பாட்டிமன்றப் பேச்சுகளில் இருந்து நம் சமூகம் விடுபடவே முடியாதா என்ற வினாக்கள் நம்மை வளைத்து நிற்கும் சங்கடங்களாக வளர்கின்றன.முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ஒரு கோடி நிதியில் ஆண்டுதோறும் பரிசுக்கு அறிவிக்கப்படும் எழுத்தாளர்களை பபாசி எப்படி தேர்வுசெய்கிறது? அதற்கான குழு எது? என்பதில்எல்லாம் கொஞ்சம் வெளிப்படைத் தேவையாகிறது. லட்ச ரூபாய் என்பது தமிழ் எழுத்தாளருக்கு நன்மைதரும் தொகைதான். இப்படியான பரிசுத் தொகைகளை வரவேற்கும் வேளையில் அதில் நடக்கும் பரிமாற்றங்களையும் கணக்கில் கொள்வது நல்லதாக இருக்கும் இல்லையா?
ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள் வந்து தங்கள் நூல்களில் கையொப்பமிட்டு வாசகர்களை சந்திக்கும் போக்கு உற்சாகமானது.காலச்சுவடு கடையில் உட்கார்ந்து சுந்தர ராமசாமி கையெழுத்துப் போடும் காட்சி என் ஞாபகப் பதிவேட்டிலிருந்து இன்னும் கூட அகலவே இல்லை. ஒவ்வொரு ஆளுமையும் இயல்பாகச் சுற்றித் திரியும் காட்சி இங்கு விட்டால் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. இன்று படிப்படியாக வளர்ந்து சென்னையைத் தாண்டிப் போய் இருக்கிறது இந்த அறிவுச்சந்தை. சில இடங்களில் நடந்த சந்தை சோபிக்கவிலை என்றாலும் அம் முயற்சிக்கான பயனை நிச்சயம் விரைவில் அறுவடை செய்யும் பபாசி.இந்த வருடம் பொருளாதார அளவில் பல புதிய பதிப்பகங்களுக்கு வரும்படி கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு மக்களின் ஒரு சிறிய அங்கீகாரம் ஏற்பட்டிருப்பதென்னவோஉண்மைதான்.காலச்சுவடு கண்ணனுடன் பேசிய போது மிகுந்த உற்சாகமாகப் பேசினார். கண்காட்சி ஆரம்பமான சில தினங்கள் சற்று சோடையாக இருந்ததாகவும், போகப் போக சூடு பிடித்துவிட்டதாகவும் அவர் சொன்னார். அவரது பேச்சில் புகார்களே இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் அடிக்கடி பார்வையிட்ட விடியல், காலச்சுவடு, வம்சி, அடையாளம், குமுதம்,பாரதி புத்தகாலயம்,என்.பி.டி என எல்லாப் பதிப்பகங்களுமே விறுவிறுப்பாகவே இருந்தன.நானும் ந.முருகேசபாண்டியனும் இரண்டு நாட்கள் சுற்றித்திரிந்தோம். சங்ககால பெண் கவிஞர்களை பற்றி ந.மு. விவாத்திதுக் கொண்டே இருந்தது என் மன நிலைக்குச் சற்று உவப்பானதாகஇருந்தது.ந.மு, ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” (காலச்சுவடு) என்ற தனது சமீபத்திய நூலின் மனப்போக்கிலிருந்து வெளியேறாமல் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சில்பேராசிரியரின் வாடை இல்லாதது நல்ல அம்சம் என்று எனக்குப்பட்டது.அவரின் நூலிற்கு அவர் எழுதி இருந்த முன்னுரையில் சங்ககால பிரதியை கட்டவிழ்த்து எழுதியிருந்தவிதம் எனக்குபிடித்திருந்ததால் பாராட்டிச் சொன்னேன்.
ஒரு வகையில் சொல்லப்போனால் அறிவுலக நம்பிக்கைவாதிகளுக்கு தமிழ்நாட்டில் போக்கிடம் இல்லை.இந்தப் புத்தகச் சந்தைதான் ஒரே இடம். டிசம்பர் மாதத்தில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் நூற்கள் வெளியிடப்படுவது, நண்பர்களைச் சந்திப்பது என்று நம்மவர்களுக்கு ஒரு கூடல் வாய்க்கிறது. புத்தகம் என்ற ஓர் உலகம் முந்தையதலைமுறைக்கு அரசியலாகவும், அறிவு மருந்தாகவும் இருந்திருக்கிறது.புத்தக அறிவினால் ஆட்சியைப் பிடிக்க ஒரு தலைமுறை புறப்பட்டு அதிகாரத்தைக் கையிலெடுத்த நிகழ்வு தாய்த் தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது என்ற சமகால உண்மையேஇன்று நம்பக் கூடியதாக இல்லை . அறிவுசார் விவாதங்கள் பொது மேடையில் நிகழ்த்தப்பட்டதற்கான சுவடுகளை சொல்லித்தந்தவர்களே அதனை இன்று மறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தேசம் தன்னுடைய இலக்கிய சிறப்பியல்புகளை உலக அரங்கிற்குள் கொண்டு செல்ல பல லட்சங்களை செலவழித்து தன் நாட்டு இலக்கியப் பிரதிகளைக் கட்டி கப்பல் கப்பலாகஅனுப்பியது என்ற கதையை வருங்காலத் தலைமுறை எப்படி உள்வாங்கிக் கொள்ள போகிறதோ புரியவில்லை. இன்றைக்குப் புத்தகத்தின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்பவர்களை ஜென் எக்ஸ் என்று குறிப்பிட்டு அழைக்கிறது நவீன உலகம்.புத்தகப் பூச்சிகளாகத் திரியும் சென்ற தலைமுறையை,அவர்கள் புத்தகத்தின் மூலம் உருவாக்கிக் கொண்ட அறிவுலகத்தை அறவே புறம் தள்ளுகிறது இன்றைய ஜென் ஒய் தலைமுறை. புத்தகம் என்றாலே இவர்களுக்கு ஒவ்வாமை.இந்தத் தலைமுறை எதையும் அனுபவ வழியிலே ஏற்கும். இவர்கள் எதையும் விட்டேத்தியாக எடுத்துக் கொள்பவர்கள். அலுவலகத்தில் பிரச்சனையா தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனே பை பை சொல்லிவிட்டு நாகரிகமாக ஒதுங்கிக் கொள்வார்கள்.ஏறக்குறையஇன்றைய காலம் இவர்களுடையது. இந்தக் காலத்தில் சிந்தனைப் பள்ளிகள் பற்றி மெய் சிலிர்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதெல்லாம் இன்றைய காலத்தைப் பற்றி அறிஞர்கள்குறிப்பிடும் ஆய்வறிக்கை.புத்தக உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு தலைமுறையின் காலகட்டத்தில் புத்தகங்கள் தமிழில் வளமாக வெளிவருவதை எப்படி புரிந்து கொள்வது? ஒவ்வொராண்டும் முந்தைய ஆண்டைவிடவிட ஏராளமான நூற்கள் வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிப்பகங்கள் தமிழில் பெருகி இருக்கின்றன. பல வருடமாக புத்தகச் சந்தைப் பக்கமே தலை காட்டாமல் இடைவெளி விட்டிருந்த க்ரியாஇந்த வருடம் கடை போட்டிருக்கிறது. ஆயிரத்து ஐநூறு பக்கத்தில் நாவல்கள் வந்திருக்கின்றன. பாழி, ஞானக்கூத்தன் கவிதைகள், சுந்தர ராமசாமி மொத்தக் கதைகள், ஜி. நாகராஜன் முழுத் தொகுப்பு,என்று இரண்டாம் பதிப்புகள் வெளிவந்து நன்றாக விற்றும்கின்றன. புதுமைப்பித்தனின் முழுத்தொகுதி ஐந்து பதிப்புகளைத் தாண்டிருக்கிறது. இவை எல்லாம் அறிவுலகம் காலியாகிவிட்டதையா நமக்குச் சொல்கின்றன.?

- நன்றி:காலச்சுவடு